தித்திப்பான ஆப்பிள் அல்வா செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
ஆப்பிள் – 2
சர்க்கரை – 2 டேபிள் ஸ்பூன்
நெய் – 1 டேபிள் ஸ்பூன்
குங்குமப்பூ – சிறிதளவு
பாதாம், பிஸ்தா (துருவியது) – 2 டீஸ்பூன்
உலர் திராட்சை – 10
முந்திரி – 5
ஏலக்காய்த் தூள் – 2 டீஸ்பூன்
செய்முறை
முதலில் ஆப்பிளை எடுத்து அதன் தோலை சீவி துருவிக் கொள்ளவும். அடுப்பில் பாத்திரம் வைத்து 2 டீஸ்பூன் நெய் சேர்த்துச் சூடானதும் ஆப்பிள் துருவலைச் சேர்த்து அடுப்பைக் குறைத்து பொன்னிறமாகும் வரை பொறுமையாக வதக்கவும். பிறகு சர்க்கரை, மீதமுள்ள நெய் சேர்த்து வதக்கி நன்கு திரண்டு வரும்போது பாதாம், பிஸ்தா, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ அனைத்தையும் சேர்த்து கலக்கவும். 2 நிமிடங்கள் அடுப்பைக் குறைத்து வைத்து இறக்கினால் சுவையான ஆப்பிள் அல்வா தயார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“