Advertisment

ஆப்பிளில் இவ்வளவு சுகர் இருக்கு… இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஆபத்தா?

அழகான சிவப்பு நிற ஆப்பிளைப் பார்த்தவுடனே சாப்பிட வேண்டும் போல இருக்கும். ஆனால், ஒருவர் நீரிழிவு நோயாளி என்றால் ஆப்பில் சாப்பிட்டால் நீரிழிவு நோயாளிக்கு ஆபத்தா என்றால் மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் பார்ப்போம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
red apple diabetes, green apple diabetes, sugar in apple, apple sugar diabetics, is apple superfood, apple for diabetics, health specials indian express, health news, indian express

அழகான சிவப்பு நிற ஆப்பிளைப் பார்த்தவுடனே சாப்பிட வேண்டும் போல இருக்கும். ஆனால், ஒருவர் நீரிழிவு நோயாளி என்றால் ஆப்பில் சாப்பிட்டால் நீரிழிவு நோயாளிக்கு ஆபத்தா என்றால் மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் பார்ப்போம். ஆப்பிளை தொடர்ந்து சாப்பிட்டால் அது இன்சுலின் எதிர்ப்பைக் குறைக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. அது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க வழிவகுக்கும்.

Advertisment

ஏனென்றால், ஆப்பிளில் உள்ள பாலிபினால்கள், ஆப்பிளின் தோலில் முதன்மையாக காணப்படுகின்றன. இது கணையத்தை இன்சுலினை வெளியிட தூண்டுகிறது. செல்கள் சர்க்கரையை உறிஞ்சுவதற்கு உதவுகிறது என்று அப்பல்லோ மருத்துவமனையின் தலைமை ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் பிரியங்கா ரோஹத்கி கூறுகிறார்.

“ஊட்டச்சத்துக்களுக்கு ஏற்ப உணவை மைக்ரோ-போர்ஷனிங் செய்வதை நம்புபவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், பச்சை ஆப்பிள்களைப் பயன்படுத்துங்கள். சிவப்பு ஆப்பிள்கள் இனிப்பானதாக இருந்தாலும், பச்சை ஆப்பிளில் குறைந்த சர்க்கரை, அதிக நார்ச்சத்து மற்றும் அதிக ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. அவை இரத்த சர்க்கரை அளவை குறைக்கின்றன” என்று டாக்டர் பிரியங்கா ரோஹத்கி கூறுகிறார். ஆப்பிளில் உள்ள கிளைசெமிக்கின் எண்ணிக்கை சுமார் 39. இது கார்ன்ஃப்ளேக்ஸைவிட குறைவாக உள்ளது.

ஆப்பிளில் உள்ள சர்க்கரை நீரிழிவு நோயாளிக்கு ஆபத்தா?

ஆப்பிள் பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்தது. இருப்பினும், பழத்தில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் உங்கள் இரத்த சர்க்கரை அளவை பாதிக்கலாம். இருப்பினும், ஒரு நல்ல செய்தி என்னவென்றால், ஆப்பிளில் காணப்படும் கார்போஹைட்ரேட்டுகள் சுத்திகரிக்கப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட சர்க்கரைகள் கொண்ட உணவுகளில் காணப்படும் சர்க்கரைகளை விட வித்தியாசமாக உங்கள் உடலை பாதிக்கிறது. ஒருவருக்கு நீரிழிவு நோய் இருந்தால், கார்போஹைட்ரேட் உள்ள உணவை சாப்பிடுவதைக் கண்காணிப்பது முக்கியம்.

“அனைத்து கார்போஹைட்ரேட்டுகளும் சமமாக உருவாக்கப்படவில்லை. ஒரு நடுத்தர ஆப்பிளில் 27 கிராம் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. ஆனால் அவற்றில் 4.8 கிராம் நார்ச்சத்துகள் உள்ளன. அவை செரிமானம் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை உறிஞ்சுவதை மெதுவாக்குகின்றன. இது ஒருவரின் இரத்த சர்க்கரை அளவை விரைவாக அதிகரிக்காது. சர்க்கரை மெதுவாக இரத்த ஓட்டத்தில் நுழைகிறது. மேலும், ஆப்பிளில் காணப்படும் சர்க்கரையின் பெரும்பகுதி பிரக்டோஸ் வகை சர்க்கரை ஆகும். இது முழுப் பழமாக சாப்பிடும்போது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைப் பாதிக்காது” என்று புனேவில் உள்ள ஜூபிடர் மருத்துவமனையின் மூத்த உணவியல் நிபுணர் டாக்டர் ஸ்வாதி சந்தன் கூறுகிறார்.

“ஆப்பிள்கள் இன்சுலின் எதிர்ப்பை மேம்படுத்துகின்றன. இன்சுலின் என்பது ஒரு ஹார்மோன். இது உங்கள் இரத்தத்தில் இருந்து உங்கள் செல்களுக்கு சர்க்கரையை கொண்டு செல்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களில், ஹார்மோன் உற்பத்தி செய்யப்படுவதில்லை (1வது வகை நீரிழிவு) அல்லது இன்சுலினுக்கு உற்பத்தி செய்யப்படும் செல்லுலார் எதிர்ப்புடன் கூடுதலாக உங்கள் தினசரி தேவைகளை (வகை 2) பூர்த்தி செய்ய போதுமான அளவு உற்பத்தி செய்யப்படுவதில்லை. ஆப்பிளை வழக்கமாக சாப்பிடுவது இன்சுலின் எதிர்ப்பைக் குறைக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. இது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க வழிவகுக்கும்” என்று டாக்டர் ஸ்வாதி சந்தன் கூறுகிறார். ஆப்பிளில் உள்ள குர்செடின் போன்ற குறிப்பிட்ட ஃபிளாவனாய்டுகள் கார்ப் செரிமானத்தை குறைப்பதன் மூலம் இரத்த குளுக்கோஸ் அளவை மேம்படுத்த உதவுகின்றன. குளோரோஜெனிக் அமிலம் உங்கள் உடல் சர்க்கரையை மிகவும் திறமையாகப் பயன்படுத்த உதவுகிறது, அதே நேரத்தில் ப்ளோரிஜின் இரத்த ஓட்டத்தில் சர்க்கரை உறிஞ்சுதலை மெதுவாக்கலாம்.

ஆய்வுகள் என்ன சொல்கின்றன?

3,39,383 பங்கேற்பாளர்கள் அடங்கிய 2019-ம் ஆண்டு பல ஆய்வுகளின் மெட்டா பகுப்பாய்வு, ஆப்பிள் சாப்பிடுவது 2வது வகை நீரிழிவு அபாயத்தை கணிசமாகக் குறைக்கும் என்று கண்டறியப்பட்டது. 2017 ஆம் ஆண்டில் அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்ட ஒரு மதிப்பாய்வு, உணவுகள் அல்லது பானங்களில் குளுக்கோஸ் அல்லது சுக்ரோஸை பிரக்டோஸுடன் மாற்றுவது உணவுக்குப் பிந்தைய இரத்த சர்க்கரை உச்சத்தையும் மற்றும் இன்சுலின் அளவைக் குறைக்க வழிவகுத்தது. கூடுதலாக, ஆரோக்கியமான கொழுப்பு அல்லது புரதத்துடன் பழங்களை இணைப்பது இரத்த சர்க்கரையின் திடீர் உயர்வைக் குறைக்கலாம்.

அமெரிக்காவை தளமாகக் கொண்ட நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசின் சில வழிகாட்டுதல்கள் நீரிழிவு நோயாளிகள் ஒரு நாளைக்கு வெவ்வேறு பழங்கள் மற்றும் காய்கறிகளை எட்டு முதல் பத்து பரிமாணங்களை உட்கொள்ள வேண்டும் என்று கூறுகின்றன. ஒரு பழம் ஒரு சிறிய ஆப்பிளுக்கு சமம்.

மேலும், நீரிழிவு நோயாளிகள் தங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்க, நாள் முழுவதும் பழங்களை உட்கொள்வதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஆப்பிள் ஏன் ஒரு சூப்பர்ஃபுட்

ஆப்பிளில் பெக்டின் ஃபைபர் நிறைந்துள்ளது. அது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது. பழத்தின் நீர் உள்ளடக்கத்துடன் கூடிய நார்ச்சத்து நிறைந்து, திருப்தியான உணர்வை ஊக்குவிக்கிறது. இது இறுதியில் சிற்றுண்டியைத் தவிர்ப்பதன் மூலம் எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. ஆப்பிள் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி, மூளை ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. வைட்டமின் சி வீக்கத்தைக் குறைக்கிறது. ஆயுர்வேதத்தின் படி, ஒரு ஆப்பிள் ஒரு மலமிளக்கி தன்மையைக் கொண்டுள்ளது. காலையில் எடுக்க வேண்டும், இது சரியான செரிமானத்திற்கு உதவுகிறது. ஆப்பிள் கூழ் மற்றும் தேன் பேஸ்ட்டைப் பயன்படுத்துவது. அதன் அழற்சி எதிர்ப்பு பண்பு காரணமாக முகப்பரு மற்றும் பருக்களை குறைக்க உதவுகிறது என்கிறார் டாக்டர் ரோஹத்கி. “அதிகபட்ச பலன்களுக்கு, தோலுடன் பழத்தை முழுவதுமாக சாப்பிடுங்கள். பழங்களை உணவுடன் சாப்பிட வேண்டாம். ஆனால், ஆனால் மதிய உணவு ஸ்னாக்ஸாகவும் காலை அல்லது மாலை ஸ்னாக்ஸாக ஆப்பிள் இருக்கலாம்” என்று டாக்டர் ரோஹத்கி கூறுகிறார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Healthy Life Diabetes Healthy Food
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment