தினமும் ஆப்பிள் சாப்பிடுபவரா நீங்கள்? உங்களுக்கு தான் இந்த தகவல்!

சமைத்து சாப்பிடும் போது கிடைக்கும் பலனை விட அப்படியே சாப்பிடுவது மிகவும் நல்லது.

சமைத்து சாப்பிடும் போது கிடைக்கும் பலனை விட அப்படியே சாப்பிடுவது மிகவும் நல்லது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
apple tips

apple tips

apple tips : ஆப்பிள் அழகு தரக்கூடியது. சத்து நிறைந்தது. ரத்தத்தின் அளவை அதிகரிக்க உதவ கூடியது. தினமும் 1 ஆப்பிள் சாப்பிட்டால் உடலுக்கு ஆரோக்கியம் என உடலுக்கு ஆப்பிளின் தேவை குறித்து நிறைய படித்திருப்பீர்கள்.

Advertisment

அதை தினமும் ஃபலோ செய்வோம் என்ற பெயரில் காலையில் ஆப்பிளை காலை உணவாகவும், ஸ்நேக்கஸாகவும் சாப்பிடும் பழக்கம் கொண்டவரா நீங்கள்? இதோ உங்களுக்கு தான் இந்த செய்தி.

1 ஆப்பிளில் 100 மில்லியன் பாக்டீரியாக்கள் இருப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுக் குறித்து நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் Frontiers in Microbiology ஜர்னலில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் மூலம் ஆர்கானி ஆப்பிள்களில் நல்ல பாக்டீரியாக்கள் அதிகம் உருவாகவதாகவும் இதன் மூலம் உடலுக்கு ஆரோக்கியம் கிட்டுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதுக் குறித்து விளக்கம் அளித்துள்ள பேராசிரியர் கேப்ரிலி பெர்க், மனிதனின் குடல் நுண்ணுயிரிகளுக்கு பாக்டீரியார்கள் மிகச் சிறந்த உணவுகள். இவற்றை சமைத்து சாப்பிடும் போது கிடைக்கும் பலனை விட அப்படியே சாப்பிடுவது மிகவும் நல்லது.

Advertisment
Advertisements

ஆர்கானிக் ஆப்பிள்களில் 100 மில்லியன் பாக்டீரியாகக்கள். இவை அனைத்தும் முழுமையாக வளர்ந்த பாக்டீரியாக்கள் ஆகும்.

எப்படி சாப்பிட வேண்டும்?

நாம் பொதுவாகவே ஆப்பிளை சாப்பிடும் போது தோல், விதையை எல்லாம் வெட்டி எறிந்து விட்டு, வெறும் சதை பகுதியை ம்ட்டும்தான் சாப்பிடுவோம். ஆனால் பழத்தில் விதை பகுதியின் தான் பாக்டீரியாக்கள் அதிகம் தங்கி இருக்கும். இதனை நீக்கி சாப்பிடும் போது பாக்டீர்யாக்களின் சத்து நமக்கு கிடைக்காமல் போக வாய்ப்புண்டு.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: