இன்றைய நவீன உலகில் எலக்ட்ரானிக்ஸ் கருவிகளின் கண்டு பிடிப்புகள், மனிதனின் பல்வேறு தேவைகளுக்கு இன்றியமையாததாக உள்ளது.
அவ்வாறு பிரபலமான ஆப்பிள் நிறுவனம் தற்போது கண்டுபிடித்துள்ள "விஷன் ப்ரோ மிக்ஸ்டு ரியாலிட்டி ஹெட்செட்டை" கொண்டு கோவை தனியார் ஜெம் மருத்துவமனை மருத்துவர்கள், அறுவை சிகிச்சையை எளிதாக்கியும் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அறுவை சிகிச்சை நடைபெற்றாலும் மருத்துவர்கள் அதனை காணும் வகையில் கண்டுபிடித்து பிரமிக்க வைத்துள்ளனர்.
இக்கருவியின் செயல்பாடுகள் குறித்து ஜெம் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பழனிவேலு மற்றும் ஜெம் மருத்துவமனையின் முதன்மை செயல் அதிகாரி பிரவீன் ராஜ் குடலியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பார்த்தசாரதி கூறியதாவது:
“ஆப்பிள் விஷன் ப்ரோ மிக்ஸ்டு ரியாலிட்டி ஹெட்செட்டை வடிவமைத்த ஆப்பிள் நிறுவனம் திரைப்படங்களை நம் கண் முன் காட்டும் வகையில் வடிவமைத்திருந்தது.
இக்கருவி இன்னும் இந்தியாவுக்கே வராத நிலையில் இக்கருவியின் செயல்பாடுகளை கொண்டு மருத்துவதுறையை மேம்படுத்த முடியுமா என்று சோதனை செய்த ஜெம் மருத்துவமனை மருத்துவர்கள் அதில் வெற்றி அடைந்தது மட்டுமன்றி மருத்துவத்துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளனர்.
அறுவை சிகிச்சையின் பொழுது மருத்துவர்களுக்கு பல்வேறு இடையூறுகள் இருந்து வந்தது.
லேப்ராஸ்கோபிக் மானிட்டரை அடிக்கடி பார்த்து, பார்த்து வயிறு, ஹெர்னியா, குடலிரக்கம், உள்ளிட்ட அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டிய நிலை இருந்து வந்தது. இதனால் மருத்துவர்களுக்கு கால விரயம் ஏற்படும், தற்போது இந்த கருவி மூலமாக நாம் எந்த பக்கத்தில் இருந்து பார்த்தாலும் 4கே கிளாரிட்டியுடன் துள்ளியமாக கணித்து அறுவை சிகிச்சையின் கால நேரத்தை குறைப்பதுடன் மிக துள்ளியமாக அறுவை சிகிச்சையை மேற்கொள்ள முடிகிறது.
இக்கருவி மருத்துவதுறையில் நாங்கள் எதிர்பார்த்ததை விட ஒரு புரட்சியை ஏற்படுத்தும் வகையில் பிரமிப்பை ஏற்படுத்துகிறது என்றார்.
இந்திய நாட்டு மதிப்பீட்டில் 4 லட்ச ரூபாய் கொண்ட இக்கருவி மூலமாக இச்சாதனையை படைத்த ஜெம் மருத்துவமனையின் மருத்துவர்களை ஆப்பிள் நிறுவனமே வியந்து பார்ப்பதாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“