மருதாணி – அவுரி பொடியை இப்படி தேய்ங்க… முடி கருகருவென மாறுவதை பாருங்க; டாக்டர் தீபா அருளாளன்

இயற்கையான முறையில் கூந்தலுக்கு கருப்பு நிறத்தை அளிக்க விரும்பினால், அவுரிப்பொடி சிறந்த தேர்வாக இருக்கும். எப்படி சரியாகப் பயன்படுத்துவது என்பது குறித்து மருத்துவர் தீபா அருளாளன் கூறிய தகவல்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

இயற்கையான முறையில் கூந்தலுக்கு கருப்பு நிறத்தை அளிக்க விரும்பினால், அவுரிப்பொடி சிறந்த தேர்வாக இருக்கும். எப்படி சரியாகப் பயன்படுத்துவது என்பது குறித்து மருத்துவர் தீபா அருளாளன் கூறிய தகவல்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
Grey hair remedy

மருதாணி – அவுரி பொடியை இப்படி தேய்ங்க… முடி கருகருவென மாறுவதை பாருங்க; டாக்டர் தீபா அருளாளன்

நரைமுடிப் பிரச்னைக்கு தீர்வு தேடுபவர்களுக்கான வரப்பிரசாதமாக உள்ளது அவுரிப்பொடி. செயற்கை சாயங்களுக்குப் பதில் இயற்கையான முறையில் கூந்தலுக்கு கருப்பு நிறத்தை அளிக்க விரும்பினால், அவுரிப்பொடி சிறந்த தேர்வாக இருக்கும். எப்படி சரியாகப் பயன்படுத்துவது என்பது குறித்து மருத்துவர் தீபா அருளாளன் கூறிய தகவல்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

Advertisment

அவுரிப்பொடியைப் பயன்படுத்தும் முறை:

அவுரிப்பொடியைப் பயன்படுத்துவது மிகவும் எளிது. காலையில் குளிப்பதற்கு சுமார் 5 நிமிடங்களுக்கு முன், மூன்று டீஸ்பூன் அவுரிப்பொடியை எடுத்துக் கொள்ளுங்கள். இதை லேசாக கதகதப்பான தண்ணீரில் கலந்துவிடுங்கள். ரொம்ப நேரம் கலக்க வேண்டியதில்லை, ஒரு 10 வினாடிகள் கலந்தாலே போதும். கலக்கும்போது முக்கிய விஷயம்: ஒரு சிட்டிகை உப்பையும், நான்காக வெட்டிய ஒரு எலுமிச்சம் பழத்தின் ஒரு பகுதியையும் சேர்க்க வேண்டும். இவை இரண்டும் அவுரிப்பொடிக்கு நல்ல நிறம் கொடுக்கும்.

Advertisment
Advertisements

கலந்தவுடன், அந்த கலவையை மூடி வைத்து 30 வினாடிகள் ஊற விடுங்கள். இந்நேரத்தில், கலவை பர்பிள் நிறமாக மாறுவதைப் பார்க்கலாம். இது இண்டிகோ நிறம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நிறமாற்றம் நிகழ்ந்தவுடன், அதை உங்கள் தலையில் அப்ளை செய்து கொள்ளுங்கள். அப்ளை செய்த பிறகு, ஒரு மணி நேரம் கழித்து தலையை அலசுங்கள். இதுதான் அவுரிப்பொடி பயன்படுத்தும் சரியான முறை. இந்த வழிமுறைகளைச் சரியாகப் பின்பற்றினால், உங்களுக்கு அடர்ந்த கருப்பு நிற கூந்தல் கிடைக்கும்.

சிலர், அவுரிப்பொடியைப் பயன்படுத்திய பிறகும் நிறம் வரவில்லை என்று புகார் கூறுவார்கள். இதற்குக் காரணம், அவர்கள் சரியான முறையில் பயன்படுத்தாமல் இருப்பதுதான். மேலே குறிப்பிட்ட வழிமுறைகளைப் பின்பற்றுவது, நீங்கள் எதிர்பார்த்த கருப்பு நிறத்தைப் பெற உதவும் என்கிறார் டாக்டர் தீபா அருளாளன்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: