தினமும் இரவு தூங்கும் முன் இதை தடவுங்க… காலையில் முகம் பிரைட்டாக மாறும்!
சரும வறட்சி என்பது பலரும் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்னை. குளிர்ந்த காற்று, மாசு, சரியான நீர் அருந்தாமை போன்ற காரணங்களால் சருமம் வறண்டுபோகலாம். சில சமயங்களில் சருமம் உரிதலும் கூட நிகழலாம்.
சரும வறட்சி என்பது பலரும் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்னை. குளிர்ந்த காற்று, மாசு, சரியான நீர் அருந்தாமை போன்ற காரணங்களால் சருமம் வறண்டுபோகலாம். சில சமயங்களில் சருமம் உரிதலும் கூட நிகழலாம்.
தினமும் இரவு தூங்கும் முன் இதை தடவுங்க… காலையில் முகம் பிரைட்டாக மாறும்!
சரும வறட்சி என்பது பலரும் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்னை. குளிர்ந்த காற்று, மாசு, சரியான நீர் அருந்தாமை போன்ற காரணங்களால் சருமம் வறண்டுபோகலாம். சில சமயங்களில் சருமம் உரிதலும் கூட நிகழலாம். இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காணும் எளிய மற்றும் இயற்கையான வழிமுறைகளை இந்தப் பதிவில் காண்போம்.
Advertisment
நெய், பாரம்பரிய மருத்துவத்தில் பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வரும் சிறந்த சருமப் பராமரிப்புப் பொருள். இரவு தூங்குவதற்கு முன், உங்கள் முகத்தை நன்றாகக் கழுவி சுத்தம் செய்துகொள்ளுங்கள். பிறகு, சிறிதளவு சுத்தமான நெய்யை (நான்கு துளிகள் போதும்) எடுத்து, முகம் முழுவதும் மென்மையாகப் பூசி, அப்படியே விட்டுவிடுங்கள். தினமும் இவ்வாறு செய்து வர, சருமத்தின் வறட்சி கணிசமாகக் குறைந்து, மிருதுவான சருமத்தைப் பெறலாம்.
கடலை மாவு - நெய் ஃபேஸ் பேக்
கடலை மாவும், நெய்யும் சேர்ந்த கலவை சருமத்திற்கு அற்புதமான ஃபேஸ் பேக்காகச் செயல்படும். ஒரு ஸ்பூன் கடலை மாவுடன் ஒரு ஸ்பூன் நெய்யைச் சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள். இந்தக் கலவையை உங்கள் முகத்தில் ஃபேஸ் பேக்காக பூசி, பதினைந்து நிமிடங்கள் உலர விடவும். பின்னர் சாதாரண நீரால் முகத்தைக் கழுவுங்கள். வாரத்திற்கு 2 முறை இவ்வாறு செய்து வர, சருமத்தில் உள்ள வறட்சி குறைந்து, முகம் பொலிவு பெறும்.
Advertisment
Advertisements
இந்த எளிய குறிப்புகளைத் தவறாமல் பின்பற்றி வந்தால், வறண்ட சருமம் என்ற பிரச்சனையிலிருந்து விடுபட்டு, ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான சருமத்தைப் பெறலாம். இவை அனைத்தும் இயற்கையான பொருட்கள் என்பதால், பக்க விளைவுகள் பற்றிய கவலையின்றி நம்பிக்கையுடன் பயன்படுத்தலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.