aquatic salamander, aquatic salamander stand still for more than seven years
மனித மீன் (ஓல்ம்) அல்லது புரோட்டியஸ் (புரோட்டஸ் ஆங்குயினஸ்) என்பது புரோட்டீடே குடும்பத்தில் உள்ள ஒரு நீர்வாழ் சாலமண்டர் ஆகும். குகையில் காணப்படும் இந்த வகை ஐரோப்பாவில் பெரிதளவில் காணப்படுகிறது. ஒரே ஒரு கோர்டேட் இனம். கண் பாரவையற்ற இந்த மனித மீன்களுக்கு முன்புறத்தில் மூன்று விரல்களும் பின்புறத்தில் இரண்டு விரல்களும் கொண்ட சிறிய கால்கள் உள்ளன.
Advertisment
போஸ்னியா ஹெர்சகோவினியனில் ஒரு பாறையில் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு அமர்ந்த ஒரு மனித மீன் இன்று வரை நகரவில்லை என்று விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. அதவாது கிட்டத்தட்ட 2,569 நாட்கள்.
எட்டு ஆண்டு காலப்பகுதியில் ஹெர்சகோவினியன் குகைகளில் 19 ஓல்ம்களின் இயக்கத்தை விஞ்ஞானிகள் கண்காணித்து வந்தனர். அதில் ஒரு குறிப்பிட்ட நீர்வாழ் சாலமண்டர், ஒபாமா நிர்வாகத்திற்குப் பின்னர் தனது விரல்களை சிறிதும் நகர்த்தவில்லை என்பதைக் கண்டு விஞ்ஞானிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Advertisment
Advertisements
ஜர்னல் ஆஃப் விலங்கியல் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, இந்த வகை விலங்குகள் குறைந்த பட்சம் நகர்வது அசாதாரணம் இல்லை என்று தெரிவித்துள்ளது.
நீர்வாழ் சாலமண்டர் தனது துணையை கண்டுபிடிப்பதற்காக மட்டுமே நகர்கின்றன. அவை 12 வருடங்களுக்கு ஒரு முறை செய்கின்றன. ஒரு துணையை கண்டுபிடிப்பதற்காக நீர்வாழ் சாலமண்டர்கள் நகர்வதற்கான உந்துதலை பெறுகின்றன. அவை 12 வருடங்களுக்கு ஒரு முறை இனப்பெருக்கும் செய்கின்றன.
நீர்வாழ் சாலமண்டர்களுக்கு என்று இரைபிடித்துண்ணி இல்லை (predators) வேட்டையாடுபவர்கள் இல்லை. பல ஆண்டுகள் உணவு இல்லாமல் வாழும் தனமையை இவைகள் பெற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news