aranmanai kili jaanu instagram : தமிழ் தொலைக்காட்சிகளில் பொழுதுபோக்கு அம்சங்கள் அதிகம் நிறைந்து காணப்படுவது விஜய் டிவி. என்றால் அதில் மாற்றக்கருத்தே இல்லை. இவங்க மட்டும் சீரியல எங்க இருந்தா தான் பிடிப்பாங்கனு தெரியாது. அதை விட முக்கியம் சீரியல் ஹீரோயின்களை தேர்வு செய்வதில் இவர்கள் செலுத்தும் கவனம். விஜய் டிவி சீரியல் ஹீரோயின்கள் சினிமா நடிகைகளுக்கு நிகராக சமூகவலைத்தளங்களில் கலக்குவது அனைவரும் அறிந்த ஒன்று.
Advertisment
விஜய் டிவியில் இப்போது மாறுபட்ட கதைக்களத்துடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் ‘அரண்மனைக் கிளி’.இதில் கதாநாயகியாக ‘ஜானு என்ற கதாபாத்திரத்தில் மோனிஷா நடித்து வருகிறார். இவரது நடிப்பு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
vijay tv aranmanai kili janu
சீரியல் கதைப்படி ஜானு அர்ஜூன் வீட்டில் மிகச் சிறந்த மருமகள். அன்பு, பொறுமை, நிதானம் என பட்டையை கிளப்புவார் நடிப்பிலும் சரி. சீரியலில் மட்டுமில்லை நிஜத்திலும் ஜானு கல்யாணம் ஆனவர். இதை அவரே பல இடங்களில் உறுதி செய்துள்ளார். அவரின் சொந்த ஊர் கேரளா.
Advertisment
Advertisements
மோனிஷா சமையலில் கலக்குவாராம். வீட்டில் இருக்கும் சமயத்தில் அடிக்கடி விதவிதமாக உணவுகளை சமைத்து கணவரை அசத்துவராம்.
சீரியலில் அவர் அணியும் அணைத்து ஆடை தேர்வுகளும் அவரின் மாமியார் தான் தேர்ந்தெடுத்து கொடுப்பாராம். கல்லூரி படிப்பு முடித்தவுடனே மலையாள சீரியலில் ஜானு அறிமுகமானர். அப்போது அவரின் ரோல் பெயர் ஜனனிக்குட்டி தான். இதற்கிடையில் மாடலிங்கும் செய்து வந்தார்.
புத்தகம் படிப்பது என்றால் ஜானுவுக்கு உயிர். ஷூட்டிங் ஸ்பாட்டிலும் அதிக புத்தகத்துடன் சுற்றுவார். அவரின் திருமண புகைப்படங்களை பார்க்க விரும்புவர்கள் இங்கே காணலாம்.ஆரம்பத்தில் சுத்தமாக தமிழ் பேச தெரியாத ஜானு இப்போது நன்கு பேச கற்றுக் கொண்டார். அவரின் கணவர் கேரளாவில் இருக்கும் பிரபல தொழிலதிபர் ஆவர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil