Aranthangi Nisha Athirappilly Falls Trip youtube video
கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவிக்குள் அடியெடுத்து வைத்தவர் அறந்தாங்கி நிஷா. தொடர்ந்து தனது நகைச்சுவை திறமை மூலம் விஜய் டிவியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அதன் அடுத்தக்கட்டமாக தற்போது வெள்ளித்திரையிலும் நிஷா நடித்து வருகிறார்.
Advertisment
இதனிடையே விஜய் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியின் மூலம் தனது கணவரையும் நிஷா’ சின்னத்திரையில் அறிமுகம் செய்தார். பின்னர் கொரோனா தொற்று காரணமாக வீட்டுக்குள் இருந்த நிஷா கருப்பு ரோஜா என்னும் யூடியூப் சேனலை ஆரம்பித்து அதில் தனது அன்றாட வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
இப்போது நிஷா விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலிலும் நடிக்கிறார்.
நிஷா சமீபத்தில் தனது கணவர், குழந்தை சஃபா மற்றும் குடும்பத்தினருடன் கேரளாவுக்கு டூர் சென்றிருந்தார். இந்நிலையில், நிஷா அதிரப்பள்ளிக்கு டூர் சென்ற வீடியோவைவும் இப்போது யூடியூபில் பதிவிட்டுள்ளார்.
வீடியோ ஆரம்பிக்கும்போதே நிஷா’ ரெண்டு நாளா கேரளா, கொச்சி-னு ஃபேமிலி டூராவே போட்டோம். வரும்போது, தேனி, திண்டுக்கல் வழியா வந்தோம். போகும்போது, அதிரப்பள்ளி போலாம்னு பிளான் போட்டோம். அங்க ஃபால்ஸ்’லாம் நல்லா இருக்கும்னு சொன்னாங்க என்று அதிரப்பள்ளிக்கு டூர் போன வீடியோவை நிஷா காட்டுகிறார்.
அதிரப்பள்ளிக்கு சென்ற நிஷாவும் குடும்பத்தினரும், அங்குள்ள கடைத் தெருக்களில் ஷாப்பிங் செய்கின்றனர். பிறகு தன் மகளுக்கு காத்தாடி ஒன்றை நிஷா வாங்கிக் கொடுத்துவிட்டு, அவரது வீட்டுக்காரரிடம் காசு கொடுத்துடுங்கனு சொல்ல, அவர் முறைக்கிறார். உடனே நிஷா புள்ளைய மட்டும் பெத்துக்கங்க.. 10 பைசா செலவு பண்றதில்லனு திட்டிக்கிட்டே, மறுபடியும் ஷாப்பிங் செல்கிறார்.
பிறகு அதிரப்பள்ளிக்கு வியூ பாண்டுக்கு சென்று, நடக்க முடியாமல் நிஷா திணற’ அவரது கணவர் தூக்கமுடியாமல் தூக்கி, பிறகு கீழே விட்டு விடுகிறார். கால் வலிக்க வலிக்க அப்படியே ஒருவழியாக நடந்து, அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு சென்ற நிஷாவும், குடும்பத்தினரும் அந்த இடங்களை பார்த்து ரசித்தனர்.
பிறகு அங்கிருக்கும் ஹோட்டலுக்கு சென்று, ஸ்னாக்ஸ் வாங்கிவிட்டு, சிப்ஸ் மட்டுமே’ 2000 ரூபாய்க்கு வாங்கனும் போல; இந்த ஊருக்கு வரது பெரிசு இல்ல. ஊருல போயி இறங்கின உடனே எல்லாரும் ரெடி ஆயிடுவாங்கனு சொல்லி, ஒவ்வொரு சொந்தங்காரங்களுக்கும் வாங்கிய ஸ்னாக்ஸை நிஷா காட்டுகிறார். இந்த வீடியோ இப்போது யூடியூபில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“