விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பலருக்கும் அறிமுகமானவர் அறந்தாங்கியைச் சேர்ந்த நிஷா. திரைத்துறையில் கதாநாயகி, கதாநாயகன் ஆகப் போகிறேன் என்று தான் பலரும் கூறுவர். நகைச்சுவை பாத்திரத்தில் நடிக்கப் போகிறேன் என்று யாரும் கூறியதில்லை. அதிலும் குறிப்பாக பெண் காமெடியன்கள் அரிதான ஒன்று.
Advertisment
அந்த வரிசையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் அறிமுகமான நிஷா தனது நகைச்சுவை பேச்சால் பலரது மனங்களை வென்றார். உருவம், நிறம் என பல விமர்சனங்கள் வந்திருந்தாலும் அனைத்தையும் தகர்த்து தனக்கென தனி பாணியை உருவாகினார். நிஷா பட்டிமன்ற பேச்சாளரும் கூட. பல நிகழ்ச்சிகளிலும் மேடை பேச்சிலும் கலக்கி வருகிறார். இவருக்கு குடும்பத்தினர் உறுதுணையாக இருந்து வருகிறார்கள். சின்னத்திரை தாண்டி கோலமாவு கோகிலா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானர். பிக் பாஸ் 4-ல் போட்டியாளராக கலந்து கொண்டார். இதில் பல விமர்சனங்கள் வந்தாலும் தனது திறமையின் மூலம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் நிஷா கருப்பு ரோஜா என்ற பெயரில் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்திருக்கிறார். பலரும் இவரை அதில் பின்தொடர்கின்றனர். இதைத் தொடர்ந்து நிஷா சொந்தமாக புது வீடு கட்டியுள்ளார். புது வீடு பால் காய்ச்சும் வீடியோவை தனது யூடியூப் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். சொந்த வீடு கட்டுவது குறித்து முன்பே தெரிவித்திருந்த நிஷா தற்போது குடும்பத்துடன் பால் காய்ச்சி மகிழ்ந்துள்ளார்.
Advertisment
Advertisements
வீடு இன்னும் முழுமையாக கட்டி முடிக்காத நிலையில் பால் காய்ச்சியதால் இவரது ஃபாலோவர்கள் இது குறித்து கேட்டனர். இதற்கு அவர் விளக்கம் அளித்துள்ளார். சொந்த வீடு என் பல வருட கனவு. தற்போது பால் காய்ச்சியதற்கு 2 காரணங்கள் இருந்தது. எனக்கு தை மாதம் பால் காய்ச்ச வேண்டும் என்று ஆசை. மற்றொரு காரணம் என் உறவினர் சின்னமா ஹஜ் பயணம் மேற்கொள்வதால் விரைவாக பால் காய்ச்சி விட்டோம் என்று கூறினார்.