கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவிக்குள் அடியெடுத்து வைத்தவர் அறந்தாங்கி நிஷா. தற்போது வெள்ளித்திரையிலும் நடித்து வருகிறார்.
ரியாலிட்டி ஷோ, யூடியூப் சேனல் என எப்போதும் பிஸியாக இருக்கும் நிஷா இன்ஸ்டாகிராமிலும் ஆக்டிவாக இருப்பார். அதில் அடிக்கடி தன் குடும்பத்துடன் இருக்கும் படங்கள், ஷீட்டிங்கின் போது எடுக்கப்பட்ட படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வார்.
அப்படி நிஷா சமீபத்தில் இன்ஸ்டாவில் பகிர்ந்த புகைப்படம், இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
‘நம்ம வாழ்க்கையில எத்தனையோ போட்டோ எடுக்கிறோம் ஆனால் பள்ளிப்பருவத்தில் போட்டோ என்கிறது எல்லாம் அவ்வளவு ஈசி கிடையாது. அப்படி ரொம்ப பொக்கிஷமா எடுத்த போட்டோ இது. அறந்தாங்கி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி நான் படிச்ச பள்ளிக்கூடம், அந்த பக்கம் போகும் போதெல்லாம் எனக்கு அவ்ளோ சந்தோஷமா இருக்கும்.
இந்த போட்டோவை நான் அவ்வளவு பொக்கிஷமா பாதுகாக்கிறேன். இதுல ஒக்காந்து இருக்க எல்லா வாத்தியார் கிட்ட அடி வாங்கியாச்சு. இதுல நான் இருக்கிற இடத்தை கண்டுபிடிக்கிறது உங்களுக்கு கொஞ்சம் கஷ்டம்தான். முடிஞ்சா கண்டுபிடிங்க, அப்புறம் இதில் இருக்கிற நண்பர்கள் நம்ம படிக்கும்போது phone லாம் கிடையாது, அதனால நிறைய பேரோட நான் இப்ப வரைக்கும் contact இல்லாம இருக்கேன், இந்த போஸ்ட் பார்த்தவுடனே என் கூட படிச்ச நண்பர்கள் யாராவது இருந்தா கமெண்ட் பண்ணுங்க...... என்று நிஷா அதில் பதிவிட்டுள்ளார்.
இதைப் பார்த்த ரசிகர்கள், நிஷா இந்த புகைப்படத்தில் எங்கே இருக்கிறார் என்று கமென்டில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த போட்டோவுல நிஷா எங்க இருக்காங்க? நீங்களும் கண்டுபிடிங்க பார்க்கலாம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“