scorecardresearch

அந்த சமயத்துல அவங்க செய்த உதவி ரொம்பவே பெரிசு.. அறந்தாங்கி நிஷா எமோஷனல்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான, பிக்பாஸ் ஜோடிகள் நடன நிகழ்ச்சியில், நிஷாவும் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு ஃபைனல்ஸ் வரை வந்தார்.

அந்த சமயத்துல அவங்க செய்த உதவி ரொம்பவே பெரிசு.. அறந்தாங்கி நிஷா எமோஷனல்!
இப்போது நிஷா விஜய் டிவியின் ஃபேமஸ் சீரியல் பாரதி கண்ணம்மாவிலும் நடிக்கிறார்.

அறந்தாங்கி நிஷா கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவிக்குள் அடியெடுத்து வைத்தார். அதில் இவரது நகைச்சுவை பேச்சுகள் மக்களை மிகவும் கவர்ந்தது. தொடர்ந்து தனது நகைச்சுவை திறமை மூலம் விஜய் டிவியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் நிஷா பங்கேற்றார். அதன் அடுத்தக்கட்டமாக தற்போது வெள்ளித்திரையிலும் நிஷா நடித்து வருகிறார்.

இதனிடையே விஜய் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியின் மூலம் தனது கணவரையும் சின்னத்திரையில் அறிமுகம் செய்தார்.

பின்னர் கொரோனா தொற்று காரணமாக வீட்டுக்குள் இருந்த நிஷா கருப்பு ரோஜா என்னும் யூடியுப் சேனலை ஆரம்பித்து அதில் தனது அன்றாட வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

இப்போது நிஷா விஜய் டிவியின் ஃபேமஸ் சீரியல் பாரதி கண்ணம்மாவிலும் நடிக்கிறார்.

இதற்கிடையே, சில மாதங்களுக்கு முன்பு’ விஜய் டிவியில் ஒளிபரப்பான, பிக்பாஸ் ஜோடிகள் நடன நிகழ்ச்சியில், நிஷாவும் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு ஃபைனல்ஸ் வரை வந்தார். ஃபைனலில் இது நிஷாவா? என்று அனைவரும் வாயை பிளக்கும்படி, தாடி பாலாஜியுடன் சேர்ந்து மரண குத்தாட்டம் போட்டார் நிஷா.

நிஷா நடனத்தை பார்த்து, ரம்யா கிருஷ்ணன், நகுல் வியக்க, சில நிமிடங்களிலே அரங்கிலிருந்த அனைவரையும் அழவைத்தார்.

அதற்கு காரணம், அவர் வாழ்வில் நிகழ்ந்த கோர விபத்து தான். அதை அனிதா சம்பத் நியாபகப்படுத்த’ அப்போது நடந்த சம்பவங்களையும், தானும் தன் குழந்தையும் காயங்களுடன் கிடந்ததையும் நிஷா மனம் திறந்து பேசினார்.

கணவனிடம் இருந்த குழந்தையை கையில் வாங்கிய நிஷா, அவள் முகத்தை பார்க்கவும், பழைய நியாபகங்கள் கண்ணுக்கு வர, கண்கலங்கி விட்டார்.  அப்போது பேசிய நிஷா’ நான் ரொம்ப ஜாலியா இருப்பேன். ரொம்ப வேலைனுதான் போயிட்டு இருப்பேன். பாப்பா பிறந்த 15 நாட்கள நான் ஷூட்டிக்கு வந்துட்டேன். எனக்கு யாருமே இல்லை. எங்கம்மா மட்டும் தான் எனக்கு எல்லாமே. அதனால, வேலைக்கு போயிட்டே இருப்பேன். ஆனா, பாப்பா பிறந்த அப்புறம் வேலைக்கு போக வேண்டாம்னு நிறைய பேர் சொன்னாங்க. ஆனாலும் விஜய் டிவியில, வேலை இருந்ததால பாப்பாவ தூக்கிட்டு வந்துருவேன்.

அன்னைக்கு பாப்பாவுக்கு சரியா 60 நாள், புதுக்கோட்டையில ஒரு நிகழ்ச்சிய முடிச்சிட்டு, சென்னைக்கு ஷூட் வரும்போது ஒரு இடத்துல அப்படியே கார் கவுந்திருச்சி. என் பாப்பாவுக்கு காது பிய்ஞ்சி அவ்ளோ ரத்தம் கொட்டுது. என்னால எதுவுமே பண்ண முடியல. அந்த பச்சைக் குழந்தை என்னெல்லாம் அனுபவிக்கக் கூடாதோ, அதையெல்லாமே, அந்த 60 நாள்ல அனுபவிச்சிருச்சு.

ரத்தம் ஏத்தி, பின்னாடி மண்டைல ரத்தம் உறைஞ்சிருக்குனு ஏதேதோ சொன்னாங்க. எனக்கு எதுவுமே காதுல விழல. எல்லா கஷ்டத்தையும் அந்த குழந்தை அந்த ஒரு நாள்ல பாத்துருச்சு. அந்த குழந்தைய கஷ்டப்படுத்திட்டேனு எனக்குல்ல அந்த உறுத்தல் இருந்துட்டே இருக்கும்.

இதெல்லாத்துக்கும் மேல, இந்த மேடையில ஒருத்தர பத்தி’ ரொம்ப பெருமையா பேசனும்னு’  ஈரோடு மகேஷ் இக்கட்டனா சூழ்நிலையில்’ தனக்கு செய்த உதவிகள் குறித்து நிஷா பேசினார். அதைக் கேட்கும் போதே அனைவருக்கும் புல்லரித்து விட்டது

அப்போதுதான் ஈரோடு மகேஷின் இன்னொரு முகம் அதைப் பார்த்த அனைவருக்கும் தெரியவந்தது.

இந்நிலையில்’ நிஷா சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் மீண்டும் அந்த சம்பவம் குறித்து பேசினார்.

அதில்’ குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில்’ நானும் தொகுத்து வழங்கினேன். அப்போது கர்ப்பமாக இருந்தேன். பாப்பா பிறந்த எட்டாவது நாள்ல நான் அவளையும் தூக்கிட்டு நிகழ்ச்சிகளுக்கு வர ஆரம்பித்து விட்டேன்.

எல்லோரும் ரெஸ்ட் எடுக்க வேண்டியதுதானேனு என்னை திட்டினாங்க. இந்த இடத்துக்கு வரதுக்கு நான் பட்ட அவமானமும் கஷ்டமும் அதிகம். அதனால இந்த இடத்தை தக்கவைக்கிறது ரொம்ப முக்கியம்னு நினைச்சேன்.

அப்படி ஒரு நாள் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை ஷூட்டிங்கிற்காக வந்துட்டு இருக்கும் போது செங்கல்பட்டு பக்கத்துல எங்களுக்கு ஆக்சிடென்ட் ஆகி விட்டது என்று பழைய நினைவுகளை மீண்டும் நிஷா சொல்கிறார்.

ஒரு மூணு பசங்க தான் எங்களுக்கு உதவி செய்தாங்க. அந்த பையனிடம் என் குழந்தையை கொஞ்சம் பாருங்கனு சொன்னேன்.

ஈரோடு மகேஷ் அண்ணா, ரவூஃபா மேம்’ இரண்டு பேரும் ஆஸ்பத்திரிக்கு வந்தாங்க. ரவூஃபா மேம் தான் என்னோட ஆஸ்பிட்டல் பில் கட்டினாங்க. அவங்களுக்கும் எங்களை காப்பாத்தி ஹாஸ்பிடல் கூட்டிட்டு வந்த அந்த பசங்களுக்கும் எப்போதும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கேன்.

இப்போவரை அந்தப் பசங்களோட நானும், மகேஷ் அண்ணாவும் பேசிட்டுத்தான் இருக்கோம். அந்த சமயத்தில அவங்க செய்த உதவி ரொம்பவே பெரிசு என்று நிஷா ரொம்ப எமோஷனலாக பேசினார். நிஷா பேட்டியளித்த இந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Aranthangi nisha shares about accident she faced video went viral