அறந்தாங்கி நிஷா கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவிக்குள் அடியெடுத்து வைத்தார். அதில் இவரது நகைச்சுவை பேச்சுகள் மக்களை மிகவும் கவர்ந்தது. தொடர்ந்து தனது நகைச்சுவை திறமை மூலம் விஜய் டிவியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் நிஷா பங்கேற்றார். அதன் அடுத்தக்கட்டமாக தற்போது வெள்ளித்திரையிலும் நிஷா நடித்து வருகிறார்.
இதனிடையே விஜய் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியின் மூலம் தனது கணவரையும் சின்னத்திரையில் அறிமுகம் செய்தார்.
பின்னர் கொரோனா தொற்று காரணமாக வீட்டுக்குள் இருந்த நிஷா கருப்பு ரோஜா என்னும் யூடியுப் சேனலை ஆரம்பித்து அதில் தனது அன்றாட வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
இப்போது நிஷா விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்கிறார்.
சீரியல், ரியாலிட்டி ஷோ, யூடியூப் சேனல் என எப்போதும் பிஸியாக இருக்கும் நிஷா இன்ஸ்டாகிராமிலும் ஆக்டிவாக இருப்பார். அதில் அடிக்கடி தன் குடும்பத்துடன் இருக்கும் படங்கள், ஷீட்டிங்கின் போது எடுக்கப்பட்ட படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வார்.
அப்படி நிஷா சமீபத்தில் இன்ஸ்டாவில் பகிர்ந்த புகைப்படம், இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில் நிஷா, தன் மகன் அஷ்ரத்துடன் இருக்கும் படத்தை பகிர்ந்து, பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
என் முதல் நம்பிக்கைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அம்மா இருக்கிற வரைக்கும் நீ ஹாப்பியா தான் இருப்ப மகனே...... லவ் யூ டா ஹேப்பி பர்த் டே ஹர்ஷத் என நிஷா அதில் பதிவிட்டுள்ளார்.
நிஷாவுக்கு. அஷ்ரத் என்ற மகனும், சஃப்ரா என்ற மகளும் உள்ளனர். ஒருமுறை நிஷா, தனது மகன் அஷ்ரத்தை ஹாஸ்டலில் சேர்த்த வீடியோவை தனது யூடியூபில் பகிர்ந்திருந்தார்.
அப்போது நிஷா பேசுகையில்; அஷ்ரத் மிகவும் சமத்தான குழந்தை. அவன்தான் என்னுடைய கனவு. அறந்தாங்கியில் அம்மாவிடம் தான் அவர் வளர்ந்தான். 1 முதல் 5 வரை அங்குதான் படித்தான். விளையாட்டில் அவனுக்கு மிகவும் ஆர்வம் உள்ளது. எனக்கும் படிப்பெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், அவன் நிறைய விளையாட வேண்டும் என்ற ஆசை இருந்தது. அவன் மிகவும் அமைதியானவன். யாரிடமும் அவ்வளவாக பேசமாட்டான். அதனால் ஹாஸ்டலில் இருந்தால் புதிய நண்பர்களிடம் பழகுவான். அவனுடைய மனது மாறும். மேலும் அவன் கூடைப்பந்து, நீச்சல் என நிறைய விளையாட்டில் ஈடுபடுவான் என்று தன் மகன் குறித்து பேசியிருந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.