Advertisment

எனக்கு எல்லாமே என் தம்பிதான்.. நிஷா எமோஷனல் வீடியோ

என் தம்பி சவுதி அரேபியால இருந்தான். அப்போ அம்மா, பொண்ண பிடிச்சிருக்கா கேட்க சொன்னாங்க. ஆனா நான், நம்ம தம்பிதானு அவன்கிட்ட கேட்காமலே பிடிச்சிருக்குனு சொல்லிட்டேன்- நிஷா

author-image
WebDesk
Oct 01, 2022 12:53 IST
Aranthangi Nisha

Aranthangi Nisha

கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவிக்குள் அடியெடுத்து வைத்தவர் அறந்தாங்கி நிஷா. தற்போது வெள்ளித்திரையிலும் நடித்து வருகிறார்.

Advertisment

ஒருமுறை விஜய் டிவியில் ஒளிபரப்பான உடன்பிறப்பே நிகழ்ச்சியில் நிஷா, தன் தம்பியுடன் கலந்து கொண்டு, நிறைய விஷயங்களை பற்றி பேசியிருந்தார். அந்த வீடியோவை தனது கருப்பு ரோஜா யூடியூப் சேனலிலும் பகிர்ந்திருந்தார். அந்த நிகழ்ச்சியில் நிஷா தனது தம்பிக்கு மணப்பெண் பார்த்த கதையை பற்றி பேசினார்.

என் தம்பி சவுதி அரேபியால இருந்தான். அப்போ அம்மா, பொண்ண பிடிச்சிருக்கா கேட்க சொன்னாங்க. ஆனா நான் நம்ம தம்பிதானு, அவன்கிட்ட கேட்காமலே பிடிச்சிருக்குனு சொல்லிட்டேன்.

அப்புறம் என் அம்மா, என்னோட தம்பிக்கு கால் பண்ணி அக்கா பாத்துருக்காப்பா; உனக்கு பிடிச்சிருக்கா கேட்டாங்க. ஆனா என் தம்பி’ பொண்ணோட போட்டோவ நிச்சயத்தார்த்தம் வரை பார்க்கல.  நிஷா யார் சொன்னாலும் கட்டுவேன், நிஷா என்ன சொன்னாலும் கேட்பேன்னு, என்னை நம்பி கல்யாணத்துக்கு வந்தான்.

ஆனா ஒரு வருஷம் கழிச்சி கல்யாணம் பண்ணிக்கிறேன் சொன்னான். நான் அவசரப்பட்டு வாடானு சொல்லிட்டேன். அவன் சவுதி அரேபியால 60 ஆயிரம் சம்பளம் வாங்கிட்டு இருந்தான். கல்யாணத்துக்கு வந்துட்டு, கொரோனா’வால இப்போ ஊருலயே செட்டில் ஆயிட்டான். ரொம்ப கம்மியா தான் இப்போ சம்பளம் வாங்குறான். அதெல்லாம் பாக்கும் போது எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது. அதனால தான் அவன் குழந்தைய நான் படிக்க வைப்பேன். அவன் குழந்தைய நான் கல்யாணம் பண்ணி கொடுப்பேன். வாழ்க்கையில எல்லா அக்காவுக்குமே தம்பிதான் முதல் குழந்தை. அதேமாதிரி எனக்கு என்னோட தம்பிதான் முதல் குழந்தை.

என் வாழ்க்கை முழுக்க என் தம்பிய என் குழந்தை மாதிரி நான் பாத்துக்குவேன். எனக்கு எல்லாமே என் தம்பிதான் என கண்கலங்கினார் நிஷா.

அந்த வீடியோ இங்கே!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment