ரஜினி சார் கூட நடிக்கும்போது அந்த யூனிஃபார்ம் ரொம்ப டைட்டா… அறந்தாங்கி நிஷா வெயிட் லாஸ் பண்ணதே இதனால தான்

'ஜெயிலர்' படத்தில் ரஜினி சாருடன் நடிக்கும்போது, அந்த யூனிஃபார்ம் எனக்கு ரொம்ப டைட்டா இருந்தது. உட்காரக்கூட முடியல, மூச்சு திணறின மாதிரி உணர்ந்தேன்.

'ஜெயிலர்' படத்தில் ரஜினி சாருடன் நடிக்கும்போது, அந்த யூனிஃபார்ம் எனக்கு ரொம்ப டைட்டா இருந்தது. உட்காரக்கூட முடியல, மூச்சு திணறின மாதிரி உணர்ந்தேன்.

author-image
WebDesk
New Update
Aranthangi Nisha weight loss

Aranthangi Nisha weight loss journey

அண்மையில் தனது உடல் எடையில் கணிசமாகக் குறைந்து, ஸ்லிம்மாக இருக்கும் அரந்தாங்கி நிஷாவை பார்த்து, சமூக வலைத்தளங்களில் பலரும் அவர் உடல் எடையைக் குறைத்தது எப்படி என்று கேட்டு வருகின்றனர். சிலர், அவருக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டதா என்றும் கமென்ட் செய்திருந்தனர். இது குறித்து நிஷா, யூடியூப் வீடியோ ஒன்றின் மூலம் தனது ரசிகர்களுக்கு விரிவாக விளக்கம் அளித்துள்ளார்.

"ரொம்ப நாளா நிறைய பேர் என்கிட்ட ஒரு கேள்வி கேட்டுட்டே இருக்கீங்க, 'எப்படி வெயிட் லாஸ் பண்ணீங்க?'ன்னு. அது பரவாயில்லை, சில பேர் 'உங்களுக்கு சுகரா அக்கா?'ன்னு கேட்டப்போ நான் உண்மையிலேயே ஷாக் ஆகிட்டேன். எனக்கு சர்க்கரை எல்லாம் இல்லை. ஆனாலும், பதட்டத்துல நானும் போய் செக் பண்ணிப் பார்த்தேன். எந்த பிரச்சனையும் இல்லை. நான் ஆரோக்கியமா இருக்கேன்." என்று கூறிய நிஷா, தனது உடல் எடை குறைப்புப் பயணத்தை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

Advertisment

நான் உடல் எடையைக் குறைக்கணும்னு முடிவெடுத்ததுக்கு ரெண்டு முக்கியமான காரணங்கள் இருக்கு.

முதல் காரணம்: எனது தொழில்!

'ஜெயிலர்' படத்தில் ரஜினி சாருடன் நடிக்கும்போது, அந்த யூனிஃபார்ம் எனக்கு ரொம்ப டைட்டா இருந்தது. உட்காரக்கூட முடியல, மூச்சு திணறின மாதிரி உணர்ந்தேன். இது வெறும் ஒரு படம்னு நினைச்சாலும், 'நாம இப்படி கஷ்டப்படலாமா?'ன்னு ஒரு எண்ணம் மனசுல வந்துச்சு.

அதே மாதிரி, அடுத்து தனுஷ் சாருடைய 'ராயன்' படத்துக்கு போலீஸ் கெட்டப் கேட்டப்போ, 'திரும்பவும் அதே நிலைமை வேண்டாம்'னு முடிவு செஞ்சேன். என்னோட தொழில் காரணமா, நான் இன்னும் சுறுசுறுப்பா இருக்கணும், நிறைய சிரமங்களைச் சந்திக்கக் கூடாதுன்னு உறுதியா இருந்தேன்.

இரண்டாவது காரணம்: உடல்நலம்!

Advertisment
Advertisements

தொகுப்பாளரா நான் நிறைய நேரம் நின்னுட்டே வேலை செய்வேன். சிலசமயம் விடிய விடியகூட ஷூட்டிங் இருக்கும். அப்போ எனக்கு கால் வலி ரொம்ப அதிகமா இருந்துச்சு. 'நம்ம உடம்பு எடை அதிகமா இருக்கிறதாலதான் இந்த வலி வருதோ?'ன்னு யோசிச்சேன். அதனாலதான் ஆரோக்கியத்துக்காகவும் எடை குறைக்கணும்னு நினைச்சேன்.

என்னுடைய 'வெயிட் லாஸ்' ரகசியம்: இது ரொம்ப ஈஸி!
நானும் பல தப்புகளைப் பண்ணதுக்கு அப்புறம்தான், சரியான வழிமுறையைக் கண்டுபிடிச்சேன். இந்த வழிகள் கண்டிப்பா உங்களுக்கும் உதவும்னு நம்புறேன்.

1. இரத்தப் பரிசோதனை அவசியம்!

வெயிட் லாஸ் பண்ணனும்னு முடிவெடுத்ததும், முதலில் ஒரு முழு உடல் பரிசோதனை செஞ்சுக்கோங்க. அதுல என்ன குறைபாடு இருக்குன்னு தெரிஞ்சாதான், அதுக்கு ஏத்த உணவு முறையை ஃபாலோ பண்ண முடியும். எனக்குக் கொலஸ்ட்ரால் அதிகமா இருந்தது. அதனால அதுக்கு ஏத்த உணவுகளை நான் எடுத்துக்க ஆரம்பிச்சேன்.

2. இனிப்பை முழுசா தவிர்த்தேன்!

வெயிட் லாஸ் செய்யணும்னு முடிவெடுத்தா, முதல்ல சர்க்கரையை முழுசா கைவிடுங்க. நான் சர்க்கரை இல்லாம பிளாக் டீ, பிளாக் காபி, க்ரீன் டீன்னு குடிக்க ஆரம்பிச்சேன். முதல் பத்து நாள் ரொம்ப கோபம் வரும், எரிச்சலா இருக்கும். எனக்கும் அப்படிதான் இருந்துச்சு. ஆனா அந்த பத்து நாள் தாண்டிட்டீங்கன்னா, அதுக்கப்புறம் பழகிடும்.

3. ஆரோக்கியமான காலை உணவு!

காலைல வெந்நீர், தேன், லெமன் இதெல்லாம் குடிச்சு வயித்தை புண்ணாக்கிக்காதீங்க. முதல்ல ஒரு வாரம் மட்டும் லெமன், புதினா, கொத்தமல்லி, இஞ்சி, கருவேப்பிலை கலந்த டீடாக்ஸ் வாட்டர் குடிங்க. அதுக்கப்புறம் கேழ்வரகு கூழ், கம்பங்கூழ், பப்பாளி, ஆப்பிள் போன்ற பழங்கள், முருங்கைக்கீரை சூப் போன்றவற்றை எடுத்துக்கிட்டேன். ஹோட்டல் இட்லி, தோசை, பூரி போன்றவற்றை தவிர்த்துட்டு, ஆரோக்கியமான உணவுகளை வீட்டிலேயே சாப்பிடுங்க.

4. வெளியில சாப்பிடுறதை குறைங்க!

முடிஞ்ச அளவுக்கு வெளியில சாப்பிடறதை அவாய்ட் பண்ணுங்க. ஒருவேளை அவசரமா வெளியில சாப்பிட வேண்டிய சூழ்நிலை வந்தா, மறுநாள் முழுக்க டீடாக்ஸ் வாட்டர் எடுத்து உடம்பை சுத்தம் செய்யணும். பீஸ்ஸா, பர்கர், பானிபூரி போன்றவற்றை நான் எப்போதாவது சாப்பிடுவேன். ஆனா அப்போ, இரவு உணவைத் தவிர்த்துவிடுவேன்.

5. எடையை அடிக்கடி செக் பண்ணாதீங்க!

முதல் பத்து நாள் டயட் பண்ணதுக்கு அப்புறம் நான் என் எடையை செக் பண்ணும்போது, ஒரு கிலோ, அரை கிலோ குறைஞ்சிருந்துச்சு. அந்த சின்ன மாற்றம்கூட எனக்கு ஒரு பெரிய நம்பிக்கையை கொடுத்தது. வாரத்திற்கு ஒருமுறை அல்லது பத்து நாட்களுக்கு ஒருமுறை எடையைச் செக் பண்ணுங்க. அப்போதான் உங்களுக்கு ஒரு நல்ல மாற்றம் தெரியும்.

6. உடற்பயிற்சி கட்டாயம்!

நம்ம டயட் பண்ணா, உடம்போட எடை குறையும். ஆனா, தொப்பை குறையாது! தொப்பை குறையணும்னா உடற்பயிற்சி அவசியம். யூடியூபில் பார்த்து, வீட்டிலேயே குனிந்து நிமிர்ந்து, குதித்து, நடனம் ஆடுவது போன்ற எளிமையான பயிற்சிகளை நான் செஞ்சேன். இதுபோல உங்களுக்கும் பிடித்த எளிமையான பயிற்சிகளை நீங்க செய்யலாம்.

இந்த விஷயங்களையெல்லாம் நான் என்னோட அனுபவத்துல இருந்துதான் கத்துக்கிட்டேன். இது என் தன்னம்பிக்கையையும், உடல்நலத்தையும் மேம்படுத்தியிருக்கு. நான் கர்ப்பத்துக்குப் பிறகு எனக்கு இருந்த மாதவிடாய் பிரச்சனைகள் எல்லாம் சரியாகி, இப்போ சரியான தேதியில் மாதவிடாய் சுழற்சி நடக்குது. இதை கேட்கும்போது, இந்த வெயிட் லாஸ் வெறும் அழகுக்கானது மட்டும் இல்ல, ஆரோக்கியத்துக்கும் ரொம்ப முக்கியம்னு உங்களுக்கு புரியும். என்னால் முடிஞ்சப்போ, உங்களாலயும் கண்டிப்பா முடியும். நம்பிக்கையோட முயற்சி செய்யுங்க! என்று நம்பிக்கையுடன் முடிக்கிறார் நிஷா. 

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: