New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/04/Nisha.jpg)
Aranthangi Nisha went Vj Archana family function photo went viral
அர்ச்சனா, பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி மூலம் விஜய் டிவியில் என்ட்ரி ஆனார். அதே சீசனில்’ அறந்தாங்கி நிஷாவும் கலந்து கொண்டார்.
Aranthangi Nisha went Vj Archana family function photo went viral
விஜய் டிவியையும், ரியாலிட்டி ஷோக்களையும் பிரிக்க முடியாது. விஜய் டிவியின் பலமே அந்த சேனலில் பணியாற்றும் காமெடியன்கள் தான். அதற்கேற்ற மாதிரி விஜய் டிவியும், காமெடியன்களை ஒரே நிகழ்ச்சியுடன் ஓரம் கட்டாமல், சீரியல், ரியாலிட்டி ஷோ என தாங்கள் ஒளிபரப்பும் எல்லா நிகழ்ச்சிகளிலும் அவர்களுக்கான வாய்ப்பை வழங்கி வருகிறது.
அப்படி சில காமெடியன்கள் தங்கள் அதீத திறமை மூலம், வெள்ளித்திரையிலும் கால்பதித்து பிரகாசித்து வருகின்றனர்.
அந்தவகையில் அறந்தாங்கி நிஷா கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவிக்குள் அடியெடுத்து வைத்தார். தொடர்ந்து தனது நகைச்சுவை திறமை மூலம் விஜய் டிவியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் நிஷா பங்கேற்றார்.
இதனிடையே விஜய் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியின் மூலம் தனது கணவரையும் சின்னத்திரையில் அறிமுகம் செய்தார்.
இப்போது நிஷா விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்கிறார்.
சீரியல், ரியாலிட்டி ஷோ, யூடியூப் சேனல் என எப்போதும் பிஸியாக இருக்கும் நிஷா இன்ஸ்டாகிராமிலும் ஆக்டிவாக இருப்பார். அதில் அடிக்கடி தன் குடும்பத்துடன் இருக்கும் படங்கள், ஷீட்டிங்கின் போது எடுக்கப்பட்ட படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வார்.
அப்படி நிஷா சமீபத்தில் இன்ஸ்டாவில் பகிர்ந்த புகைப்படம், இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
காமெடி டைம் அர்ச்சனா என்றால் தமிழகத்தில் யாருக்கும் தெரியாமல் இருக்காது. 20 ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் அர்ச்சனா தமிழ் மக்களின் பிரபல தொகுப்பாளினியாக இருக்கிறார். அவர் மகள் சாராவும், இப்போதே டிவி சேனல்களில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க ஆரம்பித்துவிட்டார்.
அர்ச்சனா, பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி மூலம் விஜய் டிவியில் என்ட்ரி ஆனார். அதே சீசனில்’ அறந்தாங்கி நிஷாவும் கலந்து கொண்டார். வீட்டில் இருவருக்கும் இடையே, சில பிரச்சனைகள் இருந்தாலும் இருவரும் நல்ல தோழிகளாக இருந்தனர். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னும் இருவரது நட்பும் இன்னும் தொடர்கிறது.
அந்தவகையில், அர்ச்சனாவின் வீட்டு விசேஷத்துக்கு, இப்போது நிஷா நேரில் சென்று வாழ்த்தியுள்ளார். அர்ச்சனாவுக்கு அனிதா என்ற ஒரு தங்கை இருக்கிறார். இவருக்கு கடந்த ஆண்டு, ஆர்யன் என்ற ஆண்குழந்தை பிறந்தது. அர்ச்சனா, அனிதா, சாரா மூவரும் குட்டிக் குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை அடிக்கடி தங்கள் இன்ஸ்டாகிராமிலும், யூடியூப் பக்கத்திலும் பகிர்வார்கள்.
இப்போது ஆர்யன் பிறந்து ஒரு வயது ஆனதை முன்னிட்டு, பிறந்தநாள் விழா நடத்தியுள்ளனர். அந்த விழாவுக்கு அறந்தாங்கி நிஷா நேரில் சென்று ஆர்யனை வாழ்த்தியுள்ளார். அந்த புகைப்பங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த நிஷா, “இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஆர்யன். எப்போவும் மகிழ்ச்சியா, சந்தோஷமா இருங்க” என எழுதியுள்ளார். அதைப் பார்த்த பலரும் குட்டிக்குழந்தை ஆர்யனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.