விஜய் டிவியையும், ரியாலிட்டி ஷோக்களையும் பிரிக்க முடியாது.
விஜய் டிவியின் பலமே அந்த சேனலில் பணியாற்றும் காமெடியன்கள் தான். மற்ற டிவி சேனல்களுடன் ஒப்பிடுகையில் விஜய் டிவியில் வரும் காமெடியன்கள் மிகவும் திறமையானவர்களாக இருக்கின்றனர். இன்னும் சொல்ல போனால், மற்ற சேனல்களும், அவர்களை வைத்துதான் பல ஷோக்களை நடத்துகின்றனர்.
அதற்கேற்ற மாதிரி விஜய் டிவியும், காமெடியன்களை ஒரே நிகழ்ச்சியுடன் ஓரம் கட்டாமல், சீரியல், ரியாலிட்டி ஷோ என தாங்கள் ஒளிபரப்பும் எல்லா நிகழ்ச்சிகளிலும் அவர்களுக்கான வாய்ப்பை வழங்கி வருகிறது.
அப்படி சில காமெடியன்கள் தங்கள் அதீத திறமை மூலம், வெள்ளித்திரையிலும் கால்பதித்து பிரகாசித்து வருகின்றனர்.
அந்தவகையில் அறந்தாங்கி நிஷா கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவிக்குள் அடியெடுத்து வைத்தார். தொடர்ந்து தனது நகைச்சுவை திறமை மூலம் விஜய் டிவியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் நிஷா பங்கேற்றார். அதன் அடுத்தக்கட்டமாக தற்போது வெள்ளித்திரையிலும் நிஷா நடித்து வருகிறார்.
இதனிடையே விஜய் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியின் மூலம் தனது கணவரையும் சின்னத்திரையில் அறிமுகம் செய்தார்.
விஜய் டிவியின் ஃபேமஸ் சீரியல் பாரதி கண்ணம்மாவிலும் நிஷா நடிக்கிறார். மேலும் சூப்பர் டாடி ரியாலிட்டி ஷோவிலும் ஆங்கராக இருக்கிறார்.
நிஷா இன்ஸ்டாகிராமிலும் ஆக்டிவாக இருப்பார். அதில் அடிக்கடி தன் குடும்பத்துடன் இருக்கும் படங்கள், ஷீட்டிங்கின் போது எடுக்கப்பட்ட படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வார்.
அப்படி நிஷா சமீபத்தில் இன்ஸ்டாவில் பகிர்ந்த புகைப்படம், இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
விஜய் டிவியின் பிரபல காமெடியன் மற்றும் தொகுப்பாளர் ஈரோடு மகேஷ் மகளின் பிறந்தநாளின்போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை நிஷா இன்ஸ்டாவில் பகிர்ந்து, ”என் அன்பு மருமகள் அமிழ்தாவின் பிறந்த நாள் விழா. எப்போதும் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு என்னுடைய வாழ்த்துக்கள் தங்கமே.....”என்று வாழ்த்தியுள்ளார்.
அதில்’ ஈரோடு மகேஷ், அவரது மனைவி, மகள் மற்றும் நிஷா ஆகியோர் இருக்கின்றனர். நீயா நானா கோபிநாத் அவரது மகள் வெண்பா உடன் இருக்கும் மற்றொரு படத்தையும் நிஷா இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
இந்த படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“