'அச்சும்மா'வுக்கு தனிக் கட்சி பிளான் இருக்குமோ? இப்படி மீட்டிங் இதுவரை யாரும் போட்டதில்லை!
அர்ச்சனா தன் வெறித்தன ரசிகையான சுமதியை அழைத்து, அங்கிருக்கும் மக்களிடம் அறிமுகம் செய்து வைக்கிறார். அவரும் என் குடும்பம் கூட எனக்கு இவ்வளவு சந்தோஷம் கொடுத்ததில்லை என்று கண்கலங்குகிறார்.
அர்ச்சனா தன் வெறித்தன ரசிகையான சுமதியை அழைத்து, அங்கிருக்கும் மக்களிடம் அறிமுகம் செய்து வைக்கிறார். அவரும் என் குடும்பம் கூட எனக்கு இவ்வளவு சந்தோஷம் கொடுத்ததில்லை என்று கண்கலங்குகிறார்.
Archana chandhoke Wow life Youtube channel Fans Meet up
காமெடி டைம் அர்ச்சனா என்றால் தமிழகத்தில் யாருக்கும் தெரியாமல் இருக்காது. 20 ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் அர்ச்சனா தமிழ் மக்களின் பிரபல தொகுப்பாளினியாக இருக்கிறார். அவர் மகள் சாராவும், இப்போதே டிவி சேனல்களில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க ஆரம்பித்துவிட்டார்.
Advertisment
அர்ச்சனா, பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி மூலம் விஜய் டிவியில் என்ட்ரி ஆனார். அர்ச்சனாவும், சாராவும் சேர்ந்து நடித்த டாக்டர் படம் வசூலை வாரிக் குவித்தது.
அர்ச்சனாவுக்கு அனிதா என்ற ஒரு தங்கை இருக்கிறார். இவருக்கு கடந்த ஆண்டு, ஆர்யன் என்ற ஆண்குழந்தை பிறந்தது. அர்ச்சனா, அனிதா, சாரா மூவரும் குட்டிக் குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை அடிக்கடி தங்கள் இன்ஸ்டாகிராமிலும், யூடியூப் பக்கத்திலும் பகிர்வார்கள்.
அர்ச்சனா Wow Life எனும் பெயரில் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்துள்ளார். அதில் இவரது ஹோம் டூர், கிச்சன் டூர், ஃபிரிட்ஜ் டூர் வீடியோக்கள் மிகவும் பிரபலம். அதேபோல, இவர் யூடியூபில் பகிர்ந்த பாத்ரூம் வீடியோவும் பல சர்ச்சைகளை கிளப்பியது.
Advertisment
Advertisements
Wow Life யூடியூப் சேனலை கிட்டத்தட்ட 8 லட்சம் பேர் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். இந்நிலையில் அர்ச்சனா தனது சப்ஸ்கிரைபர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பெரியளவில் மீட்-அப் ஒன்றை நட த்தியுள்ளார். அந்த வீடியோவையும் தனது யூடியூப் சேனலில் பகிர்ந்திருக்கிறார்.
வீடியோவில், அர்ச்சனா பேசுகையில்; இன்னைக்கு நம்ம Wow Life குடும்ப நண்பர்களை சந்திக்க போறோம் என அர்ச்சனா, சாரா, அனிதா மூன்று பேரும் ரெடியாகி மீட்டிங் நடக்கும் மண்டபத்துக்கு காரில் செல்கின்றனர். அங்கு சென்ற உடனே அர்ச்சனா, ஆயிரம் பேரு இருக்கிற ஷோவ ஹோஸ்ட் பண்ணும் போதுகூட இவ்வளவு பயமில்ல, ஆனா நம்மள நம்பி, நம்ம பாக்கிற வேலை நம்பி சில ஃபேமிலிஸ் வரது நினைக்கும் போது ரொம்ப பதட்டா இருக்கு என்கிறார்.
அங்கு இவர்கள் செல்வதற்கு முன்பே, ஆர்.ஜே. ஜோ விருந்தினர்களை வரவேற்று பேசிக் கொண்டிருந்தார். அங்க இருக்கும் மக்களிடம் உங்களுக்கு வொவ் லைஃப் சேனலை யாரை பிடிக்கும்? என்ன விஷயங்கள் பிடிக்கும் என ஜோ கேள்வி கேட்க, அவுங்க ஃபேமிலில இருக்கிற நெருக்கம், அக்கா, தங்கச்சி ரிலேஷன்ஷிப், அச்சு, சாரா பண்ற காமெடிஸ் ரொம்ப பிடிக்கும் என ஒவ்வொருவரும் ஒரு பதிலை கூறுகின்றனர்.
இப்படியே ஜோ பேசிக் கொண்டே இருக்க, அர்ச்சனாவும் அனிதாவும் மண்டபத்துக்குள் மாஸாக எண்ட்ரி கொடுக்க, அங்கிருந்தவர்கள் அனைவரும் உற்சாகமாகி விட்டனர்.
உடனே அர்ச்சனா, ரொம்ப சந்தோஷமான விஷயம் என்னென்னா, 90 சதவீதம் பெண்கள் வந்திருக்கீங்க. உங்களை எல்லாம் பாக்கிறதுல்ல ரொம்ப சந்தோஷம் என்கிறார். அனிதாவும் அனைவரையும் வரவேற்று, உங்களால தான் இங்க இருக்கோம் என அனைவருக்கும் நன்றி கூறுகிறார்.
அர்ச்சனா தன் வெறித்தன ரசிகையான சுமதியை அழைத்து, அங்கிருக்கும் மக்களிடம் அறிமுகம் செய்து வைக்கிறார். அவரும் என் குடும்பம் கூட எனக்கு இவ்வளவு சந்தோஷம் கொடுத்ததில்லை என்று கண்கலங்குகிறார்.
இப்படி அர்ச்சனா அங்கு கூடியிருந்த ரசிகைகளிடம் பேச, ஆர்யனும், சாராவும் எண்ட்ரி கொடுக்கின்றனர். அப்போது பேசிய சாரா, எங்களுக்கு இவ்வளவு சப்போர்ட் கொடுத்துருக்கீங்க. அதுக்காக நன்றி. வொவ் லைஃப் ஆரம்பிச்சு 2 வருஷம் ஆகுது. கிட்டத்தட்ட 300 வீடியோஸ் போட்டுருக்கோம். இவ்வளவு அன்பு கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி. அந்த பாத்ரூம் டூர் அப்புறம் கூட இருந்தீங்க பாத்தீங்களா? அதுக்காகவே பெரிய நன்றி என்று கூறுகிறார்.
இப்படி எண்ட்ரி மட்டுமே ஒரு வீடியோவாக யூடியூபில் போட்டுள்ளனர். அடுத்து என்ன நடந்தது என தெரிந்துகொள்ள அடுத்த வீடியோ வரும் வரை காத்திருக்க வேண்டும்.