அர்ச்சனாவும், சாராவும் சின்னத்திரையின் பிரபலமான அம்மா மகளாக உள்ளனர்.
அர்ச்சனா 20 ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் பிரபல தொகுப்பாளினியாக இருக்கிறார். சாராவும் இப்போதே டிவி சேனல்களில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார்.
அர்ச்சனா சோஷியல் மீடியாவிலும் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். அப்படி அர்ச்சனா சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ஒரு வீடியோ பலரையும் கவர்ந்தது.
இந்த போட்டோவை பார்த்த ரசிகர்களுக்கு மீண்டும் காமெடி டைம், இளமை புதுமை அர்ச்சனா ஞாபகம் வந்துவிட்டது.
அதைப் பார்த்த ரசிகர்கள், அச்சுமா போட்டோ அழகா இருக்கு… ஏய்ய் எங்க இளைமை புதுமை அர்ச்சனா அக்கா… இதய திருடன் ஹீரோயின் மாதிரி இருக்காங்க.. டிடி, ரம்யாவுக்கு முன் எல்லாப் பெண்களும் அர்ச்சனாவை அதிகம் விரும்பினார்கள், அந்த அழகான நாட்களை மிஸ் பண்ணுகிறோம்… என்று கமென்டில் பதிவிட்டு வருகின்றனர்…
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“