அர்ச்சனா 20 ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் பிரபல தொகுப்பாளினியாக இருக்கிறார். இவர் மகள் சாராவும் இப்போதே டிவி சேனல்களில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார்.
அர்ச்சனாவுக்கு அனிதா என்ற ஒரு தங்கை இருக்கிறார். இவருக்கு ஆர்யன் என்ற மகன் இருக்கிறான். அர்ச்சனா, அனிதா, சாரா மூவரும் ஆர்யனுடன் இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை அடிக்கடி தங்கள் இன்ஸ்டாவில் பகிர்வார்கள்.
அப்படி அர்ச்சனா சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ஒரு பதிவு பார்ப்போரை உருக வைத்துள்ளது.
’இது என் அப்பா பிறந்த வாடகை வீடு.. நான் பிறந்ததும் இங்குதான். நாங்கள் இங்கிருந்து செல்வதற்கு முன்பு, என் முன்னோர்கள் இங்கு 68 வருடங்களுக்கும் மேலாக (வாடகைக்கு) வாழ்ந்தார்கள்.. கிட்டதட்ட 25 வருடங்கள் கழித்து அந்த வீட்டிற்கு சென்றேன்!! என் அப்பாவின் 75வது பிறந்தநாளில், இது உண்மையிலேயே மிக உணர்ச்சிகரமான தருணம் !!!
அப்பா பார்த்துக் கொண்டிருக்கிறார்’.. என்று அர்ச்சனா உணர்ச்சிபொங்க அதில் பதிவிட்டுள்ளார்…
இந்த வீடியோவுக்கு அனிதா, ’நான் வெளியூரில் இருந்ததால், இந்த வீட்டிற்கு வரமுடியவில்லை. உங்களுக்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், குறிப்பாக அம்மாவின் நினைவுகளை மீட்டெடுக்க முடிந்ததில் சந்தோஷம்:).
ஏதோ ஒரு காரணத்திற்காக அவரது பிறந்தநாளில் ஏதோ மாயாஜாலம் நடக்கிறது, அதுவே ஒவ்வொரு அடியிலும் அவர் நம்மை பார்த்துக்கொண்டு இங்கே இருக்கிறார் என்று நம்ப வைக்கிறது. லவ் யூ அப்பா! என்று கமெண்டில் பதிவிட்டுள்ளார்…
இதற்கு, அப்பாவின் ஆசிர்வாதம் உங்களுக்கு எப்போதும் இருக்கும்,
அக்கா நிறைய வீடு வாங்குறீங்க, வீட்டு உரிமையாளருக்கு அதை விற்கும் யோசனை இருந்தால், அந்த வீடை விட்டுடாதீங்க. இது சிறந்த நினைவாக இருக்கும், மேலும் இது பொக்கிஷமாக இருக்க வேண்டும், என்று கமென்டில் பதிவிட்டுள்ளனர்..
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“