'என் வாழ்க்கையின் சிறந்த தருணம் அது...' ரஜினிகாந்த் உடன் ஆட்டோகிராப் வாங்கிய தருணத்தை பகிர்ந்த அர்ச்சனா!

பிரபல தொகுப்பாளினியும், பிக்பாஸ் போட்டியாளருமான அர்ச்சனாவின் புதிய 'ஹோம் டூர்' வீடியோ, இணையத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. தனது குடும்பத்தின் ஆசைகளையும், கனவுகளையும் சேர்த்து பிரம்மாண்டமாக அவர் கட்டியிருக்கும் வீடு, பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

பிரபல தொகுப்பாளினியும், பிக்பாஸ் போட்டியாளருமான அர்ச்சனாவின் புதிய 'ஹோம் டூர்' வீடியோ, இணையத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. தனது குடும்பத்தின் ஆசைகளையும், கனவுகளையும் சேர்த்து பிரம்மாண்டமாக அவர் கட்டியிருக்கும் வீடு, பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
Archana Chandhoke Home Tour

'என் வாழ்க்கையின் சிறந்த தருணம் அது...' ரஜினிகாந்த் உடன் ஆட்டோகிராப் வாங்கிய தருணத்தை பகிர்ந்த அர்ச்சனா!

தமிழ் சின்னத் திரையில் தொகுப்பாளினியாக கலக்கி வரும் அர்ச்சனா, 'காமெடி டைம்' நிகழ்ச்சியின் மூலம் தனது பயணத்தை தொடங்கினார். இந்த நகைச்சுவை நிகழ்ச்சி மிகப்பெரிய வெற்றி பெற்றது. தொடர்ந்து, பல தமிழ் நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களில் நடித்துள்ள இவர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றிருந்தார். 'என் வழி தனி வழி' படத்தில் நடித்த அர்ச்சனா, டாக்டர், நான் சிரித்தால்  போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 2004-ல் வினீத் முத்துக்கிருஷ்ணனை திருமணம் செய்த இவருக்கு, ஜாரா வினீத் என்ற மகள் இருக்கிறார். அர்ச்சனா போலவே, ஜாராவும் தொகுப்பாளினியாக ஜீ தமிழ் நிகழ்ச்சிகளில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

Advertisment

அர்ச்சனாவின் புதிய 'ஹோம் டூர்' வீடியோ, இணையத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. தனது குடும்பத்தின் ஆசைகளையும், கனவுகளையும் சேர்த்து பிரம்மாண்டமாக அவர் கட்டியிருக்கும் வீடு, பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, 16 பேர் ஒன்றாக அமர்ந்து பேசும் அளவுக்கு பெரிய ஹால் வைத்திருப்பதாக JFW Binge யூடியூப் சேனலுக்கு அளித்த ஹோம் டூர் வீடியோவில் அர்ச்சனா பகிர்ந்துள்ளார்.

அர்ச்சனாவின் வீட்டுக்குள் நுழையும்போதே, பல சுவாரஸ்யமான விஷயங்கள் நம்மை வரவேற்கின்றன. வீட்டின் முகப்பில், அர்ச்சனா ஜீ தமிழில் முதன்முதலில் தொகுத்து வழங்கிய 'அதிர்ஷ்டலட்சுமி' நிகழ்ச்சியின் இயக்குநர் பரிசாக அளித்த ஒரு சிலையை வைத்துள்ளார். அதுமட்டுமின்றி, அதன் பின்புறம் எகிப்திய மம்மிகள் போன்ற டைல்ஸ்களை பதித்து, தனித்துவமான தோற்றத்தைக் கொடுத்துள்ளார்.

Advertisment
Advertisements

வீட்டுக்குள் நுழைந்தவுடன், தண்ணீருக்கு மேலே அமைக்கப்பட்டுள்ள அழகிய ஊஞ்சல் கண்களைக் கவர்கிறது. சிறுவயதிலிருந்தே தண்ணீருக்கு மேல் ஊஞ்சல் இருக்க வேண்டும் என்ற தனது கனவை அர்ச்சனா இதில் நிறைவேற்றியுள்ளார். "நல்ல மனசு உள்ள இடத்தில் அதிக மழை பெய்யும் என நம்புவோம்" என்று புன்னகையுடன் அவர் கூறியுள்ளார். அர்ச்சனாவின் கணவர் இந்திய கப்பல் படையில் பணிபுரியும் ஒரு வீரர் என்பதால், அதற்கு மரியாதை செலுத்தும் விதமாக, சிறிய கப்பல் போன்ற ஷோபா ஒன்றையும் அந்த வரவேற்பறையில் வைத்துள்ளார்.

வரவேற்பறை முழுவதும் அர்ச்சனாவின் குடும்ப புகைப்படங்கள், அதிலும் குறிப்பாக ஜீ தமிழ் சேனல் வழங்கிய பெரிய புகைப்படத்தில், அவரது உருவம் பெரியதாகவும், மகள் ஜாராவின் உருவங்கள் சிறியதாகவும் வடிவமைக்கப்பட்டிருப்பது ரசிக்க வைக்கிறது. நடிகர் ரஜினியை ஒருமுறை நேர்காணல் செய்தபோது, ரஜினி கையெழுத்திட்ட ஒரு புகைப்படத்தை அர்ச்சனா பரிசாகப் பெற்றிருக்கிறார். அந்தப் பெருமைக்குரிய புகைப் படத்தையும் அவர் தன் வீட்டில் மாட்டி வைத்துள்ளார்.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: