Advertisment

ஆச்சரியப்பட வைக்கும் காஷ்மீரின் கட்டிடக்கலை! எல்லாமே அழகு தான்!

இஸ்லாமிய உலகில் வேறு எந்த மசூதியை போல் அல்லாமல் குவிமாடங்கள் தூபிகளைக் கொண்டிருக்கிறது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Architecture in Kashmir, kashmir architecture, kashmir weaving, kashmir culture and tradition

Architecture in Kashmir, kashmir architecture, kashmir weaving, kashmir culture and tradition

டெல்லியில் உள்ள இந்திய சர்வதேச மையம், காஷ்மீர் சுற்றுலாத்துறை, INTACH, ஜம்மு காஷ்மீர் சேப்டர் ஆகியவை இணைந்து அண்மையில் டெல்லியில் நடத்திய கண்காட்சியில், புனிதமான காஷ்மீரின் கட்டடகலை காட்சிப்படுத்தப்பட்டது. கட்டமைப்பு, வடிவம் ஆகியவற்றின் மூலம் ஆன்மீக மரபுகள் எவ்வாறு தொடர்கின்றன என்பதும் வெளிப்படுத்தப்பட்டது.

Advertisment

ஷைனி வர்கீஸ்

பட்டுப்பாதையானது காஷ்மீரை மத்திய ஆசியாவுடன் இணைத்திருக்கிறது. இது ஒருபுறம் இருக்க தரைவிரிப்புகள், சால்வைகள், குங்குமப்பூ ஆகியவற்றில் நடக்கும் வணிகத்தினால், காஷ்மீர் பள்ளத்தாக்கு வளம்பெற்றது மட்டுமின்றி ஒரு பன்முக கலாசார அழகியலையும் இந்த மாநிலம் கொண்டிருக்கிறது. பொருளாதாரம், கலாசாரம் ஆகியவற்றிலான இந்த பன்முகத்தன்மை, சேர்ப்பதற்கான சூழலை உருவாக்கி உள்ளது.

Architecture in Kashmir, kashmir architecture, kashmir weaving, kashmir culture and tradition

இது நிலத்தின் கட்டமைப்பில் வெளிப்படுகிறது. ஆனந்த்நாக் அருகில் உள்ள எட்டாம் நூற்றாண்டின் மார்டண்ட் சூரிய கோயிலாக இருக்கட்டும் அல்லது பீர் தஸ்த்கீர் சஹாப்பின் 200 ஆண்டுகள் பழமையான சன்னதியாக இருக்கட்டும், காஷ்மீரியின் கைவினைத்திறன் மற்றும் ஒத்திசைவின் பொதுவான இழையாக பல நூற்றாண்டுகளின் வரலாற்றைப் பிணைக்கிறது.

டெல்லியில் உள்ள இந்திய சர்வதேச மையம், காஷ்மீர் சுற்றுலாத்துறை, INTACH, ஜம்மு காஷ்மீர் சேப்டர் ஆகியவை இணைந்து அண்மையில் டெல்லியில் நடத்திய கண்காட்சியில், புனிதமான காஷ்மீரின் கட்டடகலை காட்சிப்படுத்தப்பட்டது. கட்டமைப்பு, வடிவம் ஆகியவற்றின் மூலம் ஆன்மீக மரபுகள் எவ்வாறு தொடர்கின்றன என்பதும் வெளிப்படுத்தப்பட்டது. பொதுவான வடிவமைப்புக் கூறுகள் எப்படி புத்த மதம், சூஃபி கோவில்களுடன் இந்து கோவில்கள் மற்றும் இஸ்லாமியர்களின் மசூதிகளை தொடர்புப்படுத்துகின்றன என்று சுவரில் மாட்டப்பட்டுள்ள ஓவியங்கள், புகைப்படங்கள் விவரிக்கின்றன.

“மூன்றாம் நூற்றாண்டில் அசோகர் வந்தபோது காஷ்மீரானது இந்துமத த்தின் மையமாக இருந்தது. அசோகர் புத்தமத த்தை பரப்பினார். இந்தியாவின் பிற பகுதிகளுடன் ஒப்பிடும்போது வடிவம் மற்றும் இடத்தில் இடைக்கால கோவில்கள் வித்தியாசமாக இருந்தன. இஸ்லாம் வந்தபோது, ஈரானிய, துருக்கிய கட்ட டக் கலையில் இருந்து மிகவும் மாறுபட்ட இலக்கணமாக இது இருந்தது. உலகின் வேறு எதையும் விடவும் மிகவும் வித்தியாசமான அந்த தனிச்சிறப்பு வாய்ந்த அடையாளத்தை கடனாகக் கொடுத்தது. இதுதான் காஷ்மீரின் பிராந்திய அனுபவமாகும்,” என்கிறார் INTACH ஜம்மு&காஷ்மீர் சேப்டரை சேர்ந்த மூத்த கட்ட ட வடிவமைப்பாளரான ஹக்கீம் சமீர் ஹம்தானி.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

பல்வேறு பேர ரசுகள், எல்லைகளின் ஒரு பகுதியாக, குப்தாவாக , குஷான் அல்லது காந்தாரா-வாக அது இருக்கிறது. கட்டட கலை வடிவமைப்பு, கலாசார அனுபவத்தை தனிச்சிறப்பு வாய்ந்த காஷ்மீர் என்ற மொழியில் காஷ்மீர் உள்வாங்கியது,’’ என்கிறார் ஹம்தானி. மார்டண்ட் சூரிய கோயில் குறித்து அவர் சுட்டிக்காட்டுகிறார். நெடுவரிசைகள், பீடம் மற்றும் வளைவுகளில் கிரேக்க கட்டடக்கலை வடிவமைப்பு கூறுகளின் தாக்கம் பற்றி அவர் குறிப்பிடுகிறார். கட்டடத்தைச் சுற்றியிருக்கும் தூண்கள் காஷ்மீரின் மிக முக்கியமான உதாரணமாகும். கர்கோட்டா வம்சத்தைச் சேர்ந்த மன்னரான ல லிதாதித்யாவால் இது கட்டப்பட்டுள்ளது. காஷ்மீரில் உள்ள பெரும்பாலான கோயில்களில் பிரமிடல் மூடி பொதுவானதாக இருப்பதன் தாக்கத்தை இது வெளிப்படுத்துகிறது. தவிர இது, கோவில்களின் அனைத்து சுற்றிலும் சூழப்பட்டிருக்கும் அறைகள் கொண்ட மத்திய முற்றத்தில் செவ்வக நாற்கரங்களை பார்ப்பது அசாதாரணமானது அல்ல.

To Read this article in English

இந்த மரத்தாலான சூஃபி நலவாழ்வு மையத்தை கட்டியது. 14 வது நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்த சூஃபி துறவி மிர் சயீத் அலி ஹம்தானி என்பவராவார். கண்காட்சியில் உள்ள பேனலில்(செவ்வக வடிவிலான மரத்துண்டு)பெளத்த சைத்யா மண்டபங்களைப் போன்று எவ்வாறு இருக்கிறது என்பதை நினைவுப்படுத்துகிறது. மையத்தில் உள்ள அரங்கின் கூரை, மர நெடு வரிசைகளின் ஆதரவுடன் நிற்கின்றது. இடைக்கால காஷ்மீரின் கோவில்களில் இந்த வடிவங்களைக் காணமுடியும். ஒரு சுழலால் முடிசூட்டப்பட்டது போல இருக்கும் பல அடுக்கு பிரமிடு கூரை இந்து, பெளத்தத்தின் கடந்த கால கட்டடக்கலை வடிவமைப்பு பாரம்பர்யத்தின் பிரதியாகும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

14-ம் நூற்றாண்டில் இஸ்லாம் காஷ்மீருக்கு வருவதற்கு முன்பே, மன்னர்கள் இந்த கலையோடு இணக்கமாக இருந்தனர். கட்டடக்கலை வடிவமைப்பு அதன் சொந்த செயல்முறையைப் பற்றிப் பேசுகிறது. ஸ்ரீநகரில் உள்ள ஜாமியா மஸ்ஜித் ஏராளமான தீ விபத்துக்களை சந்தித்து, மீண்டும், மீண்டும் புனரமைக்கப்பட்டுள்ளது. எனினும், 15-ம் நூற்றாண்டின் அசல் வடிவமைப்பிலேயே வைக்கப்பட்டிருக்கிறது. இஸ்லாமிய உலகில் வேறு எந்த மசூதியை போல் அல்லாமல் குவிமாடங்கள் தூபிகளைக் கொண்டிருக்கிறது. இங்கே மீண்டும் பிரமிடு வடிவ கூரை மேற்பரப்புகள் காணப்படுகின்றன. சார் பாக்(இஸ்லாமிய நாற்கர தோட்டம்) போன்ற ஒரு முற்றம், கூரையைத் தாங்கி நிற்கும் மரத்தூண்கள் உள்ளிட்ட கட்டடக்கலை அற்புதங்களை INTACH பாதுகாக்கிறது. “கட்டடக்கலை என்பது வரலாற்றைப் புரிந்து கொள்வதற்கான கருவி,” என்கிறார் ஹம்தானி. பிந்தைய காலங்களில் கட்டடங்களில் குவிமாடங்கள் தூபிகள் போன்ற இஸ்லாமிய கூறுகள் கட்டமைக்கப்பட்டது என்று கூறும் அவர்,”பயணிக்கும் மக்கள், பல்வேறு வித்தியாசமான இஸ்லாமிய கட்டடக்கலையை பார்க்கின்றனர். இது ஒரு புதுமைக்கான கேள்வியாக இருந்தது. ஒவ்வொரு புதிய மசூதி, புதியகட்டங்கள் வரும் போதெல்லாம், காஷ்மீரின் வானலை மாறுகிறது. எவ்வாறு நாம் பாதுகாக்கப்போகின்றோம். கடந்த காலத்தை மதித்து எவ்வாறு நான் முன்னேறுகின்றோம்.

INTACH-க்கில் உள்ள குழுவினர், பியர் தஸ்த்கீர் சாஹிப் சன்னதியை 2012-ம் ஆண்டு தீவிபத்துக்குப் பின்னர் மீட்டெடுத்திருக்கின்றனர். “தீவிபத்துக்கு முன்னர் எப்படி இருந்ததோ அதனை எங்களால் மீண்டும் உருவாக்க முடிந்தது. எதுவும் மாற்றப்படவில்லை என்று அந்த சன்னதியின் தலைவர் உணர்ந்தார். தீ விபத்துக்கு முன்பு எந்த சாளரத்தில் வழிப்பட்டாரோ அதே சாளரத்தில் வழிபடுகிறார். தீ விபத்து என்பது இப்போது நினைவுகளில் மட்டுமே இருக்கிறது,” என்கிறார் ஹம்தானி. தொழுகைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தபோதிலும், அசல் கட்டம்பண்ட் கூரைகள், காகித கலவை மேற்பரப்புகள் மற்றும் செங்கல், மர கட்டமைப்பு ஆகியவற்றை புதுப்பிக்கும் பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தன.

“தொடர்ச்சியை காட்சிப்படுத்துவதே எங்கள் நோக்கம்.

அங்கே ஒரு நம்பிக்கை மற்றொன்றுக்காக உருகுகிறது. எதிர்பாரதவிதமாக, மாநிலத்தின் கலாசாரம், பாரம்பர்யத்தை பறைசாற்றும் கைவினைப் பொருட்களுக்கான அருங்காட்சியகம் இன்னும் அமைக்கப்படவில்லை. இந்த கண்காட்சியின் பொருள் அடக்கங்கள் ஒரு புத்தமாக மாற்றம் பெறும் என்று நம்புகிறோம்,” என்கிறார் ஜம்மு&காஷ்மீர் சேப்டரின், INTACH ஒருங்கிணைப்பாளர் சலீம் பெக்.

இந்த கட்டுரையை தமிழில் எழுதியவர் பாலசுப்ரமணி கார்மேகம்

Jammu And Kashmir
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment