தினசரி லிப்ஸ்டிக் பயன்படுத்தக்கூடாது என்றாலும், அது இல்லாமல் உங்களால் இருக்க முடியாது. பண்டிகை நாளில் பயன்படுத்தும் சிவப்பு நிறம் முதல் தினசரி அணிவிக்கும் நியூட் கலர் வரை லிப்ஸ்டிக் ஒருவரின் தோற்றத்தை மேம்படுத்துவதற்கான எளிய வழியாகும். ஆனால், அவற்றைப் பயன்படுத்துவது பாதுகாப்பானதா?
இதற்குப் பதிலளிக்கும் வகையில், தோல் மருத்துவர் குர்வீன் வாராய்க், சமீபத்தில் ஒரு இன்ஸ்டாகிராம் வீடியோவில், லிப்ஸ்டிக் பயன்படுத்துவதில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவைகளைக் குறித்து பகிர்ந்துள்ளார்,
எண்ணெய் மற்றும் மெழுகு ஆகியவையின் கலவைதான் லிப்ஸ்டிக். பல்வேறு சாயங்கள் மற்றும் நிறமியில் இருந்துதாதன் லிப்ஸ்டிக்கின் நிறம் தயாரிக்கப்படுகிறது. இந்த நிறமிகள் "பல்வேறு உலோகங்கள் (பொதுவாக ஆக்சைடுகள்) ஆகியவற்றின் கலவையாகும். சமீபத்தில் சில சர்ச்சைக்குரிய ஆய்வுகள் வந்தாலும், லிப்ஸ்டிக்கில் பயன்படுத்தப்படும் உலோகத்தின் அளவுகள் பாதுகாப்பு வரம்புகளுக்குள் உள்ளன.
இருப்பினும், தோல் அலர்ஜி, சென்சிட்டிவ் மற்றும் கருமையான உதடு உள்ளவர்கள் தினமும் லிப்ஸ்டிக் பயன்படுத்தினால், நிறமியிலிருந்து பாதகமான எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடும். தினமும் பயன்படுத்தும்போது இதிலிருக்கும் நிறமிகள் உதட்டை சுற்றி மோசமான தோல் அரிப்பு, உதடு கருமையாகுதல் மற்றும் வாயை சுற்றி பிக்மேண்டஷன் போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
லிப்ஸ்டிக்குகளை பாதுகாப்பாகவும், ஒட்டுமொத்த ஆரோக்கியமான உதடுகளுக்காகவும் பயன்படுத்துவது குறித்து தோல் மருத்துவர் சில பயனுள்ள குறிப்புகளைப் பகிர்ந்துள்ளார். அவை:
நீங்கள் லிப்ஸ்டிக் போடுவதற்குமுன், சன் ஸ்கீரின் கிரீம்(SPF) உடன், லிப் பாமை சேர்த்து லேசாக உதட்டில் தடவிக் கொள்ளவும். அடர் நிறங்களை விட பளபளப்பான நியூட் வகை லிப்ஸ்டிக்குகளை பயன்படுத்துங்கள். உங்களுக்கு பிடித்த சிவப்பு நிற லிப்ஸ்டிக்குகளை ஒப்பிடுகையில் குறைவான நிறமிகளே இதில் உள்ளன.
ஒரு நாளைக்கு இரண்டு முறைக்கு மேல் லிப்ஸ்டிக் போடாதீர்கள்.
முடிந்த போதெல்லாம் லிப்ஸ்டிக்கிடம் இருந்து உங்கள் உதட்டுக்கு ஓய்வு கொடுங்கள். வெளியே போகும் போது, SPF உடன் லிப்-பாம் மட்டும் அணிந்து செல்ல முயற்சி செய்து பாருங்கள்.
உங்கள் அழகுசாதனப் பொருட்களின் காலாவதி தேதியை தவறாமல் சரிபாருங்கள்.
மேலும் நாக்கு மூலம் உதடுகளை அடிக்கடி தடவுவது. புகைபிடித்தல், அதிகப்படியான சூரிய வெளிச்சம், உதட்டில் வரும் தோல் நோய் போன்றவையும் உங்கள் உதடு கருமையாவதற்கான சில காரணங்கள், எனவே அதை நீங்கள் தவிர்க்க முயற்சிக்கலாம் என தோல் மருத்துவர் குர்வீன் வாராய்க் தனது இன்ஸ்டாகிராம் வீடியோவில் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil