ஸ்டாபெரி நிறத்திற்கும், புளிப்பு மற்றும் இனிப்பு சுவைக்கும் பெயர் போனது. இந்நிலையில் சில ஆய்வுகள் ஸ்டாபெரி சாப்பிடுவதால் கால் வலி சரியாகும் என்று தெரிவிக்கிறது.
¼ கப் ஸ்டாபெரி தினமும் சாப்பிட்டால் காலில் உள்ள விக்கம் குறைவதாக 2017ம் ஆண்டு வெளியான ஆய்வு முடிவுகள் கூறுகிறது. இது தொடர்பாக வல்லுநர்கள் கூறுகையில், ஸ்டாபெரி நேரடியாக மூட்டு வலியை குணப்படுத்துவதில்லை. அதன் சத்துகள் மற்றும் பழத்தின் தன்மை வலியை குணப்படுத்த உதவுகிறது.
இதில் வைட்டமின் சி உள்ளது. இது கொலஜன் உருவாக்க உதவுகிறது. நமது நமது கார்டிலேஜின் ஆரோக்கியத்திற்கு தேவையாக உள்ளது. இந்த கார்டிலேஜ் தான் நமது மூட்டுகளை காப்பாற்றுகிறது. இதனால் வைட்டமின் சி அதிகம் உள்ள ஸ்டாபெரிகளை நாம் சாப்பிட்டால், கால் வலி ஏற்படுவது குறையும்.
மேலும் இதில் ஆந்தோசையனின்ஸ் உள்ளது. இதில் வீக்கத்திற்கு எதிரான பண்புகள் உள்ளது. இதனால் மூட்டு வலி ஏற்படாது. வீக்கத்தை உருவாக்கும் TNF-α என்ற குறியீடை இது குறைப்பதால், வலி குறையும் மற்றும் விக்கமும் குறையும்.
இதில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட் மூட்டுகளை பாதிக்காமல் பார்த்துகொள்ளும். மேலும் வலியை போக்கும். ஸ்டாபெரிகளில் அதிக அளவு ஆண்டி ஆக்ஸிடண்ட், வைட்டமின் சி, மற்றும் விக்கத்திற்கு எதிரான பண்புகள் உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“