பலாப் பழத்தின் வெளிப்புற முள் பெருசா இருக்கா? நல்ல பழம் வேணும்னா இப்படி பார்த்து வாங்குங்க!
பலாப்பழத்தை, எளிய முறையில் வெட்டி சுளை எடுப்பது எப்படி? என்று பிரபு ட்ரெக்கர் என்ற யூடியூப் சேனலில் விளக்கத்துடன் பகிரப்பட்டுள்ளது. ஒரு நல்ல பலாப் பழத்தை எப்படி தேர்வு செய்வது என்பதற்கான குறிப்புகளும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலாப்பழத்தை, எளிய முறையில் வெட்டி சுளை எடுப்பது எப்படி? என்று பிரபு ட்ரெக்கர் என்ற யூடியூப் சேனலில் விளக்கத்துடன் பகிரப்பட்டுள்ளது. ஒரு நல்ல பலாப் பழத்தை எப்படி தேர்வு செய்வது என்பதற்கான குறிப்புகளும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலாப் பழத்தின் வெளிப்புற முள் பெருசா இருக்கா? நல்ல பழம் வேணும்னா இப்படி பார்த்து வாங்குங்க!
கொல்லிமலையில் இருந்து வாங்கப்பட்ட சுமார் 35 முதல் 40 கிலோ எடையுள்ள பெரிய பலாப்பழத்தை, எளிய முறையில் வெட்டி சுளை எடுப்பது எப்படி? என்று பிரபு ட்ரெக்கர் என்ற யூடியூப் சேனலில் விளக்கத்துடன் பகிரப்பட்டுள்ளது. ஒரு நல்ல பலாப்பழத்தை எப்படி தேர்வு செய்வது என்பதற்கான குறிப்புகளை பிரபு பகிர்ந்துள்ளார்.
Advertisment
பழத்தின் மேற்பரப்பில் பள்ளமான பகுதிகளை விட, மேடான பகுதிகள் அதிகமாக இருந்தால் சுளைகள் பெரியதாகவும், அதிகமாகவும் இருக்கும். அதேபோல், பெரிய முட்கள் இருப்பது பெரிய சுளைகள் இருப்பதற்கான அறிகுறி என்கிறார் பிரபு. தொடர்ந்து, பலாப்பழம் வெட்டுவதற்கு பெரிய கருவிகள் தேவையில்லை என்றும் சிறிய கத்தி, சிறிதளவு தேங்காய் எண்ணெய் மற்றும் ஒரு ஈரமான துணி மட்டுமே போதுமானது என்கிறார். கைகளிலும், கத்தியிலும் தேங்காய் எண்ணெயைத் தடவிக்கொள்வதன் மூலம், பழத்தின் பிசுபிசுப்பான பால் கைகளில் ஒட்டாமல் தடுக்கலாம்.
பழத்தை சரிபாதியாக வெட்டிய பிறகு, அதன் நடுவில் வடியும் பாலை ஈரத்துணியால் உடனடியாகத் துடைக்க வேண்டும். பின்னர், பழத்தை மேலும் சிறு பகுதிகளாகப் பிரித்து, அதன் நடுப்பகுதியில் உள்ள தண்டை எளிதாக நீக்கலாம். இந்த எளிய முறைகளால், எந்தவித சிரமமும், பிசுபிசுப்பும் இன்றி பலாப்பழ சுளைகளை எளிதாக எடுக்கலாம்.
சுளைகளைச் சுற்றியுள்ள நார்ப் பகுதிகளை உண்ணக்கூடாது, அது சிலருக்கு வயிற்று உபாதைகளை ஏற்படுத்தலாம். அதனை நீக்கிவிட்டு சுத்தமான சுளையை உண்பதே சிறந்தது," என்று பிரபு ஆலோசனையையும் வழங்கியுள்ளார். பொதுவாக, பலாப்பழத்தை வெட்டுவதில் உள்ள சிரமங்கள் காரணமாகவே பலர் பெரிய பழங்களை வாங்கத் தயங்குவது வழக்கம். இந்நிலையில், இந்த எளிய செயல்முறை விளக்க வீடியோ பலருக்கும் பயனுள்ளதாக அமைந்துள்ளதாகப் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.