New Update
00:00
/ 00:00
நமது உடல் இயக்கத்தை சில விஷயங்கள் பாதிக்கும். இந்நிலையில் உடல் எடையை குறைக்க நினைக்கும் நபர்களுக்கு உடல் இயங்குதலில் சிக்கல் வராமல் இருக்க இதை நாம் கவனித்து கொள்ள வேண்டும்.
சூரிய ஒளி
சூரிய கதிர்களில் படமால் இருப்பது, நமது வைட்டமின் டி சத்தை மிகவும் குறைக்கும். நமது உடலில் சூரியக் கதிர்கள் படாமலே இருந்தால், அது சத்து குறைபாடை ஏற்படுத்தும்.
உடலின் சிர்காடியன் ரிதத்தை இது பாதிக்கும். இது உடல் இயக்கத்திற்கு உதவும் ஹார்மோன்களான மெலடோனின் மற்றும் சிரடோனினை பாதிக்கும்.
குறைவான தூக்கம்
நன்றான தூக்கம், இருந்தால் பசி மற்றும் நிறைவாக உணரும் ஹார்மோன்களான லெப்டின், கரிலின் ஆகியவைற்றை சீராக்கும். இந்நிலையில் நாம் சரியாக தூங்கவில்லை என்றால் இந்த சமநிலை பாதிக்கப்பட்டு, இதனால் அதிகம் பசி எடுத்து உடல் எடை அதிகமாகும்,
குறைவாக தூங்குவதால், இன்சுலின், கார்டிசோல் ஹார்மோன்கள் பாதிக்கப்படும் இதனால் உடல் எடை அதிகரிக்கும். உடல் பருமன் அதிகரிக்கும்.
பதப்படுத்தப்பட்ட உணவுகள்
பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஜங் புட்ஸில், சுத்திரகரிக்கப்பட்ட சர்க்கரை, மோசமான கொழுப்பு சத்து உள்ளது. இந்த அதிக கலோரிகள் ரத்த சர்க்கரை அளவை அதிகரித்து, இன்சுலின் செயல்பாட்டை உடல் எடுத்துகொள்ளவிடாது. இதனால் உடல் இயக்கம் பாதிக்கும்.
மன அழுத்தம்
இது ஏற்பட்டால் கார்டிசோல் என்ற ஹார்மோனை அது தூண்டும். கார்டிசோல் அளவு அதிகரித்தால், நமக்கு அதிக பசி ஏற்படும். மேலும் அதிக கலோரிகள் கொண்ட உணவை எடுத்துகொள்ள வேண்டும் என்று தோன்றும், இதனால் அதிக கொழுசத்து உடலில் சேரும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.