ஏப்ரலில் திருப்பதி போறீங்களா? இந்த நாட்களை நோட் பண்ணுங்க!

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில், மார்ச் மாத உற்சவங்கள் நிறைவடைய உள்ள நிலையில், ஏப்ரல் மாதத்தில் திருமலையில் நடைபெற உள்ள உற்சவங்கள், விழாக்கள் குறித்த விபரங்களை தேவஸ்தான நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில், மார்ச் மாத உற்சவங்கள் நிறைவடைய உள்ள நிலையில், ஏப்ரல் மாதத்தில் திருமலையில் நடைபெற உள்ள உற்சவங்கள், விழாக்கள் குறித்த விபரங்களை தேவஸ்தான நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Tirupathi 1

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயில்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

உலகப் பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதி வெங்கடேச பெருமாள் கோயிலில், மார்ச் மாத உற்சவங்கள் நிறைவடைய உள்ள நிலையில், ஏப்ரல் மாதத்தில் திருமலையில் நடைபெற உள்ள உற்சவங்கள், விழாக்கள் குறித்த விபரங்களை தேவஸ்தான நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

Advertisment

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை வரப்போகிறது. கோடை விடுமுறையில் பலரும் சுற்றுலா செல்ல திட்டமிடுவார்கள். வெறுமனே பொழுதுபோக்கு, கொண்டாட்டமான சுற்றுலாவாக மட்டுமில்லாமல், பலரும் ஆன்மீக சுற்றுலா செல்ல திட்டமிடுவார்கள். குறிப்பாக, கோடை விடுமுறைகளில் உலகப் பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு குடும்பத்துடன் செல்ல வேண்டும் என்பது பல குடும்பங்களின் திட்டமாக இருக்கும். அதனால், நீங்கள் இந்த ஏப்ரலில் திருப்பதி செல்ல திட்டமிட்டிருக்கிறீர்கள் என்றால், திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏப்ரல் மாதத்தில் முக்கிய நிகழ்வுகள் இந்த தேதிகளில் நடக்க உள்ளன. அதை தவறாமல் நோட் பண்ணிக்கொள்ளுங்கள்.

திருமலை திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய தினமும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் திருமலை திருப்பதிக்கு வந்து செல்கிறார்கள். கோடை விடுமுறை தொடங்க உள்ளதால் திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும், பள்ளி, கல்லூரி விடுமுறை தொடங்கிவிட்டால், குடும்பத்துடன் திருமலை திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் பல மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பக்தர்கள் கூட்டத்தை சமாளிப்பதற்கான முன் ஏற்பாடுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் இப்போதே மேற்கொள்ளத் தொடங்கிவிட்டது.

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில்,  மார்ச் மாத உற்சவங்கள் நிறைவடைய உள்ள நிலையில், ஏப்ரல் மாதத்தில் திருமலையில் நடைபெற உள்ள உற்சவங்கள், விழாக்கள் குறித்த விபரங்களை தேவஸ்தான நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

Advertisment
Advertisements

அதன்படி, ஏப்ரல் மாதத்தில் திருமலையில் நடைபெற உள்ள உற்சவங்கள், விழாக்கள் குறித்த விபரங்களை தேவஸ்தான நிர்வாகம் வெளியிட்டுள்ளது. 

நீங்கள் இந்த ஏப்ரல் மாதம் திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்ல திட்டமிட்டுள்ளீர்கள் என்றால், இந்த தேதிகளைக் குறித்துவைத்துக்கொண்டு உங்கள் திருப்பதி பயணத்தை திட்டமிட்டு சிறப்பு வழிபாடு, உற்சவங்கள், விழாக்களைக் காணலாம்.

அதே நேரத்தில், ஏப்ரல் மாதத்தில் ராம நவமி உள்ளிட்ட சில முக்கிய விழாக்கள் நடைபெற உள்ளதால் திருப்பதியில் தரிசன நேரம், தினசரி உற்சவங்கள் போன்றவற்றில் மாற்றங்கள் வரவும் வாய்ப்பு உள்ளது என்றும் கூறுகிறார்கள்.

திருமலை திருப்பதியில் ஏப்ரல் மாத உற்சவங்கள் விவரம்: ஏப்ரல் 5 - அன்னமாரச்சாரியா வர்தந்தி, ஏப்ரல் 7 - மகாசிவராத்திரி, ஏப்ரல் 8 - சர்வ அமாவாசை, ஏப்ரல் 9 - குரோதிநாம சம்வட்சர யுகாதி அஸ்தனம், ஏப்ரல் 11 - மச்ச ஜெயந்தி, ஏப்ரல் 17 - ஸ்ரீ ராம நவமி, ஏப்ரல், 18 - ஸ்ரீ ராம பட்டாபிஷேகம், ஏப்ரல் 19 - சர்வ ஏகாதசி, ஏப்ரல் 21 முதல் 23 வரை - சலகட்ல வசந்தோற்சவம் ஆகியவை இந்த தேதிகளில் நடைபெற உள்ளன. 

திருமலையில் தற்போது ஜூன் மாத இறுதி வரையிலான அனைத்து தரிசன மற்றும் சேவை டிக்கெட்களும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன. திருப்பதியில் மார்ச் 24ம் தேதி 80,532 பேரும், மார்ச் 25ம் தேதி 78,731 பேரும், மார்ச் 26ம் தேதி 68,563 பேரும் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். திருப்பதியில் தற்போது வரை வார நாட்களில் 60,000 முதல் 70,000 வரையிலான பக்தர்களும், வார இறுதி நாட்களில் 80,000 க்கும் அதிகமான பக்தர்களும் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமலை திருப்பதி கோயிலில் இலவச தரிசன வரிசையில் சுவாமி தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் 8 முதல் 12 மணி நேரம் வரை காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். சராசரியாக பக்தர்கள் காத்திருக்கும் அறைகளில் 10 முதல் 15 அறைகள் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி காணப்படுகிறது. 

அதனால், நீங்கள் இந்த ஏப்ரல் மாதத்தில் திருப்பதிக்கு செல்ல திட்டமிட்டுள்ளீர்கள் என்றால் இந்த விவரங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tirupati

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: