காய்ச்சல், சளி மற்றும் ஜீரண பிரச்சனைகளுக்கு, ’காதா’ என்ற பானம் தீர்வாக இருக்கும் என்று ஆயுர்வேதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீரகம், மல்லி, மிளகு, மஞ்சள் ஆகியவை சேர்த்து இந்த பானம் செய்யப்பட்டுள்ளது.
உடல் சூடு கொண்டவர்கள், இந்த பானத்தை ஒரு முறை மட்டுமே குடிக்க வேண்டும். சீரகம், மல்லி, மிளகு, மஞ்சள், துளசி ஆகியவற்றை தண்ணீருடன் கொதிக்க வைக்க வேண்டும். 10 முதல் 15 நிமிடங்கள் வரை கொதிக்க வைத்து, காலையில் முதலில் இதை பருகவும். அப்போதுதான் இதன் முழு பலனும் கிடைக்கும். இதை நாம் குடிப்பதற்கு முன்பாக நமது மருத்துவர், அல்லது டயட்டீஷியனிடம் கேட்டுக்கொள்ள வேண்டும்.
உதாரணமாக துளசி , மிளகு இருமலை குணப்படுத்தும். சீரகம், மல்லி ஜீரணத்திற்கு உதவும். எதையும் அதிக அளவில் எடுத்துகொண்டால் அது கெடுதல் என்பதால், இந்த பானத்தையும் அதிக அளவில் எடுத்துகொள்ள வேண்டாம்.
இந்த பானத்தை செய்த உடன் எடுத்துகொள்ள வேண்டும். குளிர்சாதனப் பெட்டியில் வைத்து அடுத்த நாள் எடுத்துகொள்ள கூடாது. இந்த பானம் கொரோனா காலத்தில் அதிக பிரபலமானது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
அதிக நாட்கள் இதை நாம் எடுத்துகொண்டால் மலச்சிக்கல், பைல்ஸ், மூக்கில் ரத்தம் வருவது, பருக்களை ஏற்படுத்தலாம். இதனால் இதை குறைந்த நாட்கள் எடுத்துகொள்வது நல்லது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“