/indian-express-tamil/media/media_files/2025/10/24/varkala-2025-10-24-13-18-07.jpg)
எந்த நேரமும் வேலை, வீடு என்று சுற்றுபவர்களுக்கு எங்காவது ஒரு வாரம் சுற்றுலா செல்ல வேண்டும் என்று தோன்றும். அதே போன்று மன அழுதத்தில் இருப்பவர்களையும் சுற்றுலா செல்ல மருத்துவர்கள் பரிந்துரைத்து வருகிறார். அப்படி நீங்கள் சுற்றுலா செல்ல விரும்பினாள் இங்கு குறிப்பிடும் சுற்றுலா ஸ்பாட்டை மட்டும் மிஸ் பண்ணிறாதீங்க. அது என்ன ஸ்பாட் என்பதை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
அல்மோரா
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள இந்த சிறு மலைப்பிரதேசம், இமயமலையின் தாழ்வாரத்தில் காஷ்யப் மலையின் மேல் 5 கி.மீ. உயரமான முகட்டில் நீண்டிருக்கிறது. கோவில்கள், அதிகம் போக்குவரத்து இல்லா சாலைகளில் நடந்துபோவது உங்களுக்கு மனநிம்மதியை அளிக்கும். நவம்பரில் நீங்கள் சுற்றுலா செல்ல வேண்டும் என்று நினைத்தால் இந்த இடத்தை மிஸ் பண்ணாம போய் பாருங்க.
சனா மற்றும் சர்
ஜம்மு காஷ்மீரில் உள்ள சனா மற்றும் சர் ஆகிய இரண்டு கிராமங்களின் பெயர்கள் சேர்ந்து இந்த பகுதி அழைக்கப்படுகிறது. பசுமையான மலை அடர்ந்த இந்த பகுதி ஹனிமூண் தம்பதிகளுக்கு பெஸ்ட் ஸ்பாட். நவம்பரில் இங்கு பனிப்பொழிவுக்கும் வாய்ப்புள்ளது.
கணபதிபுலே
தென்மேற்கு பருவமழை முடிந்த பின், அதாவது நவம்பரில் மகாராஷ்டிராவில் உள்ள கணபதிபுலே பகுதிக்கு செல்வது ரம்மியமான உணர்வை கொடுக்கும். மகாராஷ்டிராவின் கொன்கன் பகுதியில் அமைந்துள்ள கணபதிபுலே அழகான கடற்கரை நகரமாகும். இங்குள்ள 400 வருட பழமையான கணபதி சிலையை வழிபடவும் நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் இங்கு வருகிறார்கள். இப்பகுதி அதன் இயற்கை அழகு மற்றும் கலாசாரத்திற்காக அறியப்படுகிறது.
கோஹிமா
நாகாலந்தின் அழகிய மலை நகரமான இதுதான் அம்மாநிலத்தின் தலைநகரமும் கூட. கோஹிமா என்ற பெயர் ஆங்கிலேயர்களால் வழங்கப்பட்டதாகும். அதற்கு முந்தைய பெயர், கெவ்ஹிரா. கடல் மட்டத்தில் இருந்து 1500 மீட்டர் உயரத்தில் இந்த நகரம் உள்ளது. இந்த நகரம், அங்கமி நாக பழங்குடியினரின் பாரம்பரிய நிலப்பகுதியாகும்.
கசௌலி
ஹிமாச்சல் பிரசேசத்தில் உள்ள மலைநகரம் சுற்றுலாவுக்கு ஏற்றதாகும். இங்கு பெரும்பாலும் வானிலை 7 டிகிரி செல்ஷியஸ் முதல் 14 டிகிரி செல்ஷியஸ் வரையே இருக்கும். கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,900 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள கசெளலி அதன் பசுமையான சூழலுக்காகவும், காலனித்துவ கட்டிடக்கலைக்காகவும் பிரபலமாக அறியப்படுகிறது.
வர்கலா
கேரளாவின் கடற்கரை நகரமான இங்கு நவம்பரில் வானிலை மேக மூட்டமாகவே இருக்கும். மன அமைதி வேண்டும் என நினைப்பவர்கள் வர்கலா செல்லலாம். இங்குள்ள கேரள உணவுகளையும் ருசித்து பார்க்கலாம். இயற்கை வசீகரம் மற்றும் அமைதியான சூழலுக்காக பொன்னும்துருத்து தீவுக்குச் செல்லலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us