மன அழுத்தத்தால் நாம் அதிகம் சாப்பிடும் குணம் சிலருக்கு ஏற்படும். சிலர் மன அழுத்தத்தை கட்டுப்படுத்த ஆரோக்கியமற்ற வழிகளை தேர்வு செய்வார்கள். பிடித்த உணவுகளை அல்லது சுவையென நினைக்கும் உணவுகளை சாப்பிடுவார்கள்.
இந்நிலையில் நீங்கள் மன அழுத்தத்தால் அதிகம் சாப்பிட வேண்டும் என்று நினைத்தால் இந்த 3 உணவுகளை தேர்வு செய்யலாம்.
வேர்கடலை
இதில் வைட்டமின் பி6, மெக்னீஷியம் உள்ளது. வயிறு உப்புதலை வேர்கடலை கட்டுப்படுத்தும். இந்நிலையில் மதிய உணவுக்கு முன்பு நீங்கள் வேர்கடலையை சாப்பிடலாம்.
முந்திரி
இந்நிலையில் இதை நாம் பாயசம் மற்றும் சில பொருட்களில் மட்டுமே சேர்த்து சாப்பிடுவோம். இதில் இரும்பு சத்து, மெக்னீஷியம் உள்ளது. நீங்கள் மிகவும் சோர்வாக அல்லது குறைந்த சக்தியுடன் இருந்தால் இது அதிக சக்தியை கொடுக்கும். தூங்கப்போகும் முன்பு பாலுடன் இதை சாப்பிட வேண்டும் என்று கூறப்படுகிறது.
காய்ந்த தேங்காய்
இதில் லயூரிக் ஆசிட் உள்ளது. இது நமது கூந்தல் மற்றும் சருமத்தின் ஆரோக்கியத்திற்கு உதவும். இந்நிலையில் இதை வெல்லத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.
ஓமேகா 3 பேட்டி ஆசிட், மூளையின் செயல்பாடுகளை பாதுகாக்கும். இதனால் மன அழுத்தம் குறையும். குறிப்பாக சால்மன், வால்நட்ஸ், பிளாக்ஸ் விதைகளை நாம் எடுத்துகொள்ளலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“