மாதம்பட்டி ரங்கராஜின் வெளிநாட்டு ஹோட்டலில் அனைவரும் விரும்பி சாப்பிடும் அரிசி பருப்பு சாதம் ரெசிபி நீங்களும் செய்யலாம்.
தேவையான பொருட்கள்
10 சின்ன வெங்காயம்
2 தக்காளி
1 ஸ்பூன் மிளகாய் பொடி
1 ஸ்பூன் சாம்பார் பொடி
கால் ஸ்பூன் மஞ்சள் பொடி
அரை ஸ்பூன் இஞ்சி நறுக்கியது
அரை ஸ்பூன் பூண்டு நறுக்கியது
1 கப் அரிசி
அரை கப் பருப்பு
2 ஸ்பூன் எண்ணெய்
அரை ஸ்பூன் சீரகம்
உப்பு
கொஞ்சம் காயப் பொடி
தேங்காய் துருவல் ஒரு ஸ்பூன்
செய்முறை : ஒரு பாத்திரத்தில் எண்ணேய் சேர்த்து, அதில் சீரகம் சேர்த்து தொடர்ந்து இஞ்சி, பூண்டு சேர்க்கவும். தொடர்ந்து சின்ன வெங்காயம் நறுக்கியது, தக்காளி சேர்த்து கிளரவும். மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, சாமார் பொடி சேர்த்து கிளரவும். எண்ணெய் பிரிந்ததும், அதில் அரிசி, பருப்பை சேர்த்து, உப்பு, நெய் சேர்த்து குக்கரில் வேக வக்கவும். 3 விசில் எடுக்கவும். கடைசியாக தேங்காய் துருவல் சேர்க்கவும்.