ஒரு முறை இப்படி அரிசி உப்புமா செய்து பாருங்க. செம்ம சுவையா இருக்கும்.
தேவையான பொருட்கள்
பச்சரிசி -1 கப்
துவரம் பருப்பு – 2 ஸ்பூன்
மிளகு – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
எண்ணெய் – 3 ஸ்பூன்
கடுகு – 1 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு – 1 ஸ்பூன்
கடலை பருப்பு – 2 ஸ்பூன்
பெருங்காயத் தூள் சிறிய அளவு
பச்சை மிளகாய் – 2
வத்தல் – 2
வெங்காயம் 1
1 கொத்து கறிவேப்பிலை
2 கப் தண்ணீர்
உப்பு
தேங்காய் அரை மூடி துருவியது
செய்முறை : முதலில் அரிசி மற்றும் பருப்பை நீரில் கழுவி, நீரை வடிகட்டி உலர விட வேண்டும். பின்பு அவற்றை மிளகு, சீரகம் சேர்த்து, ரவா பதத்திற்கு ஒரு முறை லேசாக அடித்துக்கொள்ள வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து கடுகு, கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு தாளிக்க வேண்டும். இதில் பெருங்காயத்தூள், பச்சை மிளகாய், வத்தல் சேர்த்து தாளிக்க வேண்டும். அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும். அதில் கறிவேப்பிலை சேர்த்து கிளறி, தண்ணீர் ஊற்றி சுவைகேற்ப உப்பு மற்றும் துருவிய தேங்காயை சேர்த்து கிளறி நன்கு கொதிக்க ஆரம்பித்தும், பொடித்து வைத்துள்ள, அரிசியை சேர்த்து தொடர்ந்து கிளறி விட வேண்டும். நீர் ஓரளவு வற்றியதும், அடுப்பை மிதமான தீயில் வைத்து, மூடி வைத்து 10 நிமிடம் வேக வைக்க வேண்டும். 15 நிமிடங்கள் அடுப்பை அணைத்துவிட்டு, மூடியைத் திறந்து, உப்புமாவை வைத்துவிட்டு பரிமாறவும்.