arjun daughter aishwarya aishwarya arjun instagram : கடந்த 1990களில் முன்னணி ஹீரோவாக வளம் வந்தவர் நடிகர் அர்ஜுன். இவர் தமிழ் தெலுங்கு, கன்னடம், இந்தி பல மொழித் நடித்துள்ளார். திரைத்துறையில் 30 வருடம் கடந்து இன்றுவரை சினிமா துறையில் பிசியாகவே உள்ளார்.
Advertisment
இவர் நடிப்பு மட்டுமின்று சில படங்களை இயக்கியுள்ளார். இவரின் தந்தை சக்தி பிரசாத் புகழ் பெற்ற கன்னடத் நடிகர் . தவிர, இவரின் சகோதரர் கிஷோர் கன்னடத்தில் இயக்குனர்.இவருக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில் முதல் மகள் ஐஸ்வர்யா சினிமாவில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இளைய மகள் அஞ்சனா படிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.
ஐஸ்வர்யா தமிழில், 'பட்டத்து யானை' படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இந்தப் படம் 2013 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது.விஷால் ஹீரோவாக நடித்திருந்தார். அவர் 'சொல்லிவிடவா' என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார். இதை நடிகர் அர்ஜுன் தயாரித்து, இயக்கி இருந்தார். இந்தப் படம் கன்னடத்திலும் வெளியானது. இது கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படமும் பெரிதாக பேசப்படவில்லை. இதற்கு பிறகு படங்களில் நடிக்காமல் இருந்தார் ஐஸ்வர்யா அர்ஜுன்.
இந்த நேரத்தில் தான் அந்த துயரம் அரங்கேறியது. பிரபல கன்னட நடிகரும், அர்ஜூனின் தங்கை மகனுமான சீரஞ்சி மரணம் அடைந்தார். இந்த சோகம் ஒட்டு மொத்த குடும்பத்தையும் புரட்டி போட்டது. மாமாவின் பிரிவை தாங்க முடியாமல் அவரின் சிறுவயது புகைப்படத்தை ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து இருந்தார்.
அதன் பின்பு, அடுத்த சோகமாக ஐஸ்வர்யாவுக்கு கொரோனா உறுதியானது இதனால் குடும்பம் சோகத்தில் ஆழ்ந்தது. இவை எல்லாவற்றையும் தகர்ந்து எறிந்து மீண்டும் எழுந்து குடும்பத்திற்கு எனர்ஜி சேர்த்து வருகிறார் ஐஸ்வர்யா. இவர் தனது அப்பா அர்ஜூன் மீது அளவுக்கடந்த அன்பு வைத்திருப்பவர். அப்ப செல்லம் தான் இவர்.
அர்ஜூன் மீது மிடூ புகார் எழுந்த நேரத்தில், மிக மிக தைரியமாக மீடியாவில் பேட்டி அளித்து பலரின் கவனத்தையும் பெற்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news