arun vijay daughter : 1995ம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான முறை மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகர் தான் அருண் விஜய். தொடர்ந்து பல அடிகள் சினிமாவில் வங்கிய போது அருண் விஜய் தனது விடா முயற்சியை கைவிட்டதில்லை.
பிரியம், கங்கா கௌரி, இயற்க்கை, பாண்டவர் பூமி என்று பல படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியபோதும், அவரால் திரையுலகில் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை.ஆனாலும் தனது தொடர் முயற்சியால் இன்று அருண் விஜய் மிகப் பெரிய நடிகராக, தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இடத்தை பெற்றுள்ளார்.
2015ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தின் மூலம் திரையுலகில் அருண் விஜய்க்கு தங்க கதவு திறந்தது. குற்றம் 23, தடம், செக்கச்சிவந்த வானம், சகோ என்று அதிரடியாய் தொடர் வெற்றிகள். அருண் விஜய்யின் தந்தை விஜயக்குமார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அவரின் காதல் திருமணம், பிள்ளைகள் பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இதோ இந்த தொகுப்பின் மூலம் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க.
இவர் 2006ஆம் ஆண்டு பிரபல திரைப்பட தயாரிப்பாளரின் மகளான ஆரத்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு பூர்வி என்ற மகளும் அர்னவ் என்ற மகனும் இருக்கின்றனர்.
கடந்த ஜூன் 11 பூர்வியின் பிறந்த நாளான அன்று அவருக்கு வாழ்த்து சொல்லும் விதமாக தனது இன்ஸ்டாகிராமில் அவருடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட பல புகைப்படங்களை பகிர்ந்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் க்யூட் அப்பா அருண் விஜய்.
அப்போது தான் அருண் விஜய்க்கு இப்படி ஒரு மகள் இருப்பதே பலருக்கும் தெரிய வந்தது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook
Web Title:Arun vijay daughter actor arun vijay daughter purvi arun vijay wife
கொரோனா தடுப்பூசி : வதந்திகள் பரப்புவோருக்கு உள்துறை அமைச்சம் கடும் எச்சரிக்கை
எல்லோரும் தேடிக்கொண்டிருந்த பிக் பாஸ் எடிட்டர் இவர்தான் – பாலாஜி வெளியிட்ட வைரல் புகைப்படம்
தேங்காய் இல்லாத பொட்டுக்கடலை சட்னி. புதுசா இருக்குல .. டேஸ்டும் அப்படித்தான்!
ரியல் எஸ்டேட் மோசடி: தமிழகத்தில் 3850 ஏக்கர் நிலத்தை முடக்கிய அமலாக்கத் துறை
குளிர்காலத்தில் கே 2 மலை ஏறிய நேபாள அணிக்கு என்ன தேவைப்பட்டது?