சென்னையில் இதுவரை கண்டிடாத ஒரு பிரம்மாண்டம் : அருணா & தி ரேஜிங் சன்!

எந்தவித நுழைவு கட்டணமும் இன்றி, இலசமாக நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியின் ஆடியன்ஸ், குழந்தைகள் தான்.

வந்தாரை வாழ வைக்கும் சென்னை மாநகரில் எந்த சிறப்பு நிகழ்ச்சி நடந்தாலும், அந்த நிகழ்ச்சிக்கே தனி கெத்து தான். அந்த வகையில், கடந்த சனிக்கிழமை (24.2.18) அன்று மெரினா பீட்ச் பக்கம் சென்றிருந்த அனைவருக்கும் தெரிந்திருக்கும் வண்ண விளக்குகளால் வானில் நடந்த அந்த கோலாகலம். மெரினா கடற்கரைக்கு எதிரியில் அமைந்திருக்கும் ராணி மேரிக் கல்லுரியில் சனிக்கிழமை இரவு ‘அருணா & தி ரேஜிங் சன்!’(Aruna and the Raging sun)என்ற பெயரில் நடைபெற்ற கலைநிகழ்ச்சி சென்னையில் இதுவரை எவரும் காணாத ஒரு பிரமாண்டத்தை காட்டியது.

லண்டனைச் சேர்ந்த கிரெய் மற்றும் ஸ்பெயின் நாட்டின் லா ஃபுராடெல்ஸ்பவுஸ் போன்ற உலகப் புகழ்பெற்ற கலை நிகழ்ச்சி நிறுவனங்கள் சேர்ந்து சென்னையில் இந்த நிகழ்ச்சியை நடத்தினர்.  இதில் பங்கேற்ற் கலைஞர்களில் பாதி பேர் மாற்றுத்திறனாளிகள். சென்னையில் நடந்த மிகப்பெரிய மாற்றுத்திறனாளிகள் கலைநிகழ்ச்சி என்றால் அது அருணா & தி ரேஜிங் சன் தான்.

பிரிட்டிஷ் கவுன்சிலின், இந்தியா கலாச்சார ஆண்டின் இறுதி கட்டத்தின் ஒரு அங்கமாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பிரிட்டிஷ் கவுன்சிலின் நோக்கமே, நவீன இந்தியாவை கொண்டாடுவது, லட்சக்கணக்கான இளைஞர்கள் தங்களின் எதிர்காலத்தை சிறந்த முறையில் அமைத்திட ஊக்குவிப்பதேயாகும்.

 

முதலில் இந்த நிகழ்ச்சிக்கான விளம்பரங்கள் வெளியான போது, பலரின் கவனத்தையும் பெறவில்லை. அதன் பின்பு, இதற்கு முன்பு, இந்த நிகழ்ச்சி நடைபெற்ற விதத்தையும், அதில் இடம்பெற்றிருந்த கலைநிகழ்ச்சிகளின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பார்த்தப்பின்பு தான், நிகழ்ச்சி குறித்த எதிர்பார்ப்பு இளைஞர்களிடம் இருமடங்கு அதிகரித்தது.

சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு ஆரம்பமான நிகழ்ச்சியின் பிரமிப்பு இரவு 11 மணி வரை தொடர்ந்தது. கனவிலும் நினைத்திராத பலவண்ண நிறங்களால் அலங்கரிக்கப்பட்ட மேடை, 24 மீட்டர் உயரமான பொம்மலாட்ட பொம்மைகள், வானத்தை தொடும் வான்வெளி சாகசங்கள், கலர் ஃபுல் வான வேடிக்கைகள் என ஒவ்வொரு நிகழ்ச்சியும் அடி தூள் தான்.  ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும்  ஒரு சிறப்பான கதையையும் கூறப்பட்டது.

சென்னையைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இதில் கலந்துக் கொண்டது கூடுதல் சிறப்பு. ஒரு ஊனமுற்ற நபர், தனது வாழ்க்கையில் எற்படும் தடைகள், சவால்களை தகர்த்து எறிந்து விட்டு வாழ்க்கையில் எப்படி ஜெயித்தார்? என்பதை சித்தரித்து நடத்தப்பட்ட பொம்மலாட்டம் ப்ரோகேம்மின் ஹைலட்டாக அமைந்தது. அதை பார்த்த அனைவரின் கண்களிலும் கண்ணீர் வெள்ளம் தான்.

எந்தவித நுழைவு கட்டணமும் இன்றி, இலசமாக நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியின் ஆடியன்ஸ், குழந்தைகள் தான். ஓவ்வொரு சாகசங்கள்  முடிவிலும் அவர்களின் முகத்தில் தெரிந்த ஆச்சரியமும், பிரமாண்டமும் , கைத்தட்டல்களும் கலைஞர்களுக்கு உற்சாகத்தை மேலும் இரட்டிப்பாக்கியது. மொத்தத்தில் சென்னையில் முதன்முறையில், மாற்றுத்திறனாளிகள் அதிகளவில் பங்கேற்று நடத்திய வெளியரங்க நிகழ்ச்சி கண்களை விட்டு அகலாத கவர்ச்சி.

×Close
×Close