வெறும் 25 நிமிடங்களில் நாம் அசோகா அல்வா செய்யலாம். இந்த ரெசிபியை பின்பற்றினால் போதும்.
தேவையான பொருட்கள்
பாசி பருப்பு – கால் கிலோ
நெய் – கால் லிட்டர்
சர்க்கரை – அரை கிலோ
கோதுமை மாவு – 30 கிராம்
முந்திரி – 50 கிராம்
ஏலக்காய் – 2 கிராம்
ரெட் புட் கலர்
செய்முறை: பாசி பருப்பை கழுவி, 2 விசில் விட்டு வேக வைத்து எடுத்துகொள்ளலாம். தொடர்ந்து பாசி பருப்பை மிக்ஸியில் சேர்த்து அரைத்துகொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி அதில் முந்திரியை வறுக்க வேண்டும். இதை தனியாக எடுத்து வைத்துகொள்ளவும். அதே நெய்யில் கோதுமை மாவை சேர்க்கவும். தொடர்ந்து இதில் பாசி பருப்பு அரைத்ததை சேர்த்து கிளரவும். தற்போது சர்க்கரை சேர்த்து நன்றாக கிளர வேண்டும். தொடர்ந்து நெய் சேர்த்து கிளர வேண்டும். தொடர்ந்து ரெட் புட் கலர் சேர்க்கவும். நாம் எடுத்து வைத்த நொய்யை முழுவதுமாக ஊற்ற வேண்டும். கடைசியாக வறுத்த முந்திரியை சேர்க்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“