/indian-express-tamil/media/media_files/2025/01/28/AqVXCXlo38pXYQhYhK2x.jpg)
தை அமாவாசையன்று நம் முன்னோர்களுக்கு செய்யக் கூடிய தான தர்மங்கள், தர்ப்பணங்கள் அனைத்தும் நேரடியாக அவர்களை சென்றடையும் என்பது ஐதீகம். அதன்படி, தை அமாவாசை தினத்தன்று செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து, வேந்தர் பக்தி என்ற யூடியூப் சேனலில் ஜோதிடர் ஷெல்வி தெரிவித்துள்ளார்.
நீர் நிலைகள், கடற்பகுதிகளுக்கு சென்று தர்ப்பணம் செய்ய முடியாதவர்கள், தங்கள் வீட்டிலேயே எள்ளு தர்ப்பணம் செய்யலாம். அதேபோல், நம் முன்னோர்களை நினைத்து காகங்களுக்கு உணவு வைப்பதை அவசியம் கடைபிடிக்க வேண்டும் என ஜோதிடர் ஷெல்வி குறிப்பிட்டுள்ளார். இதை அமாவாசை தினம் மட்டுமின்றி தினந்தோறும் பின்பற்றலாம்.
ஒரு ஆண்டில் 96 முறை தர்ப்பணம் செய்ய வேண்டும் என சாஸ்திரங்கள் கூறுவதாக ஜோதிடர் ஷெல்வி தெரிவித்துள்ளார். ஆனால், நடைமுறையில் இது சாத்தியமற்றது என பலர் கருதுவார்கள். அதன்படி, தை அமாவாசையன்று கட்டாயமாக முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும்.
மற்ற தெய்வங்களை வணங்கியும், தனது பெற்றோர் மற்றும் முன்னோரை வணங்காவிட்டால், அவர்களுக்கு பலன் கிடைக்காது என சாஸ்திரங்களில் கூறியிருப்பதாக ஜோதிடர் ஷெல்லி தெரிவித்துள்ளார். அதன்படி, பெற்றோர் இல்லாதவர்கள் கட்டாயம் தர்ப்பணம் செய்ய வேண்டும். பெற்றோருடன் வசிப்பவர்கள் அமாவாசையன்று அன்னதானம் செய்யலாம். இதேபோல், பசுமாட்டிற்கு அகத்திக் கீரையை தவிர காய்கறிகளை கொடுக்கலாம்.
அன்னதானம் செய்பவர்கள் மதியம் 1 மணி முதல் 2 மணிக்குள்ளாக செய்திட வேண்டும். அன்னதானமாக செய்ய முடியாதவர்கள் ஏழைகளுக்கு அரிசி வாங்கி கொடுக்கலாம். இவற்றுடன் சேர்த்து கொஞ்சம் மிளகும் கொடுக்க வேண்டும். எறும்பு, பசு, காகம், நாய், பூனை ஆகிய ஜீவராசிகளுக்கு அமாவாசையன்று உணவு வைக்க வேண்டும். இப்படி செய்தால் கடவுளின் ஆசியும், முன்னோரின் ஆசியும் கிடைக்கும்.
தை அமாவாசையின் மாலை நேரத்தில் வீட்டு வாசலில் மாவிலை தோரணம் கட்டி தொங்க விட வேண்டும். மேலும், குலதெய்வ படங்களுக்கு பூக்கள் வைத்து அலங்கரிக்க வேண்டும். குறிப்பாக, குலதெய்வத்திற்கு புடவை வைத்து வழிபாடு நடத்தி, அதனை சுமங்கலி பெண்களுக்கு கொடுக்க வேண்டும். ஆனால், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இப்படி கொடுப்பதை தவிர்த்து விடலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
இது போன்ற செயல்களை தை அமாவாசையன்று பின்பற்றினால், நமக்கு ஏராளமான பலன்கள் கிடைக்கும் என ஜோதிடர் ஷெல்வி அறிவுறுத்துகிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.