வெறும் கோதுமை மாவு இருந்தாம்போதும், இந்த அதிரசம் செய்ய முடியும். வெறும் 20 நிமிடங்கள் போதும் நாம் ஈசியாக அதிரசம் செய்ய முடியும்.
தேவையான பொருட்கள்
1 கப் கோதுமை
அரை கப் பச்சரிசி மாவு
1 ½ கப் வெல்லம்
1 ½ கப் தண்ணீர்
1 சிட்டிகை உப்பு
கால் ஸ்பூன் ஏலக்காய் பொடி
1 ஸ்பூன் நெய்
பொறிக்கும் அளவு எண்ணெய்
செய்முறை: கோதுமை மாவு , பச்சரிசி மாவு இரண்டையும் சேர்த்துகொள்ளவும். இதை நன்றாக கலந்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வெல்லம் மற்றும் தண்ணீரை சேர்த்து கொள்ளவும், வெல்லம் கரைந்ததும். அதை வடிகட்டவும். தொடர்ந்து மீண்டும் இதை கொதிக்க வைக்கவும், அதில் ஏலக்காய் பொடியை சேர்த்து கிளரவும், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துகொள்ளவும். நன்றாக ஒட்டும் பதம் வந்ததும், அதில் நாம் மாவை சேர்த்து கிளர வேண்டும். தொடர்ந்து நெய் சேர்த்து கொள்ளவும். தற்போது இதை சிறிது நேரம் அப்படியே விட்டுவிடவும். தொடர்ந்து அதை உருண்டைகளாக மாற்றி, நெய் தடவிய வாழை இலையில் அதிரசம் தட்டவும். தொடர்ந்து இதை கொதிக்கும் எண்ணெய்யில் போடவும். அதிரசம் நன்றாக வெந்து மேலே எழும், அப்போது அடுத்த பக்கம் திருப்பி போடவும். இது மிகவும் சுவையாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“