அதிரசத்தை நாம் செய்யும்போது மாவை எந்த அளவில் எடுத்துகொள்ள வேண்டும் என்பது முக்கியமாக நாம் கவனம் செலுத்த வேண்டும். அதுபோல பாகு எந்த பக்குவத்தில் எடுக்கிறோம் என்பதும் மிகவும் முக்கியம். மேலும் நாம் சரியாக செய்தாலும் அதிரசம் உதிர்ந்து போய்விடும். பாகை நாம் காய்ச்சிய போது, முன்கூட்டியே எடுத்திருபோம். அல்லது மாவு பிசைந்ததும் உடனே அதிரசம் செய்திருப்போம். இந்நிலையில் இது போன்று செய்தால் அதிரசம் உதிராமல் வரும்
தேவையான பொருட்கள்
அரை கிலோ பச்சரிசி
500 கிராம் வெல்லம்
5 ஏலக்காய்
ஒரு துண்டு சுக்கு
கால் கப் தண்ணீர்
கருப்பு எள்ளு 1 ஒரு டீஸ்பூன்
கால் டீஸ்பூன் நெய்
எண்ணெய் பொறிக்கும் அளவு
செய்முறை: பச்சரியை நன்றாக கழுவ வேண்டும். அரிசியில் மூழ்கும் அளவு தண்ணீர் சேர்க்கவும். தொடர்ந்து ஊற வைக்கவும். சுமார் 4 மணி நேரம் ஊறவக்க வேண்டும். இதைத்தொடர்ந்து தண்ணீரை வடிகட்டி, வெள்ளை துணியில் அரிசியை பரப்பி காயவைக்க வேண்டும். அரிசி காய்ந்ததும், அதை மிக்ஸியில், சுக்கு, ஏலக்காய் சேர்த்து அரைத்துகொள்ளவும். அதிகம் பொடியாக அரைக்க வேண்டாம். தற்போது அரைத்த மாவை சலிக்க வேண்டும். தற்போது மாவை மூடி போட்டு மூடி வைக்கவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் வெல்லம், தண்ணீர் சேர்த்து பாகு கரைத்து கொள்ளவும். பாகு நன்றாக நுரை திரண்டு வரும்போது, ஒரு சிறிய கிணத்தில் தண்ணீரை எடுத்து வைத்துகொள்ளவும். பாகின் சில துளிகளை தண்ணீரில் ஊற்றி பார்க்கவும். அப்படி செய்யும்போது பாகு கரையாமல் இருக்க வேண்டும். மேலும் அது உருண்டையாக மாற வேண்டும். இந்நிலையில் இதில் அரைத்த மாவை சேர்த்து கிளர வேண்டும். தொடர்ந்து அதில் கருப்பு எள்ளை சேர்த்து கிளரவும். தற்போது வேறொரு பாத்திரத்திற்கு மாற்றி 3 நாட்கள் அப்படியே வைக்க வேண்டும். அந்த பாத்திரத்தின் மீது ஈரமான துணியை போட்டு மூடி அதற்கு மேலாக முடி போட்டு மூடவும். மாவை வெளியில்தான் வைக்க வேண்டும். 3 நாட்கள் கழித்து, இந்த மாவை நன்றாக கிளர வேண்டும். தற்போது இதை உருண்டைகளாக மாற்றி, எண்ணெய் தடவிய இலையில் தட்டி, எண்ணெய்யில் போட்டு பொறித்து எடுக்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“