தேவையான பொருட்கள்
இட்லி அரிசி- 1 கப்
உளுந்தம் பருப்பு- 1/4 கப்
அவல் பொரி- 1.5 கப்
வெந்தயம்- 1/2 டீஸ்பூன்
சர்க்கரை- 1 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
செய்முறை
இட்லி அரிசி, உளுந்தம் பருப்பு, பொரி, வெந்தயத்தை தனித் தனியாக சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். பிறகு, அவற்றை 3 கப் தண்ணீர் சேர்த்து 4 மணி நேரம் ஊற வைக்கவும். நன்றாக ஊறிய பிறகு, அதனை மொத்தமாக மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். அதாவது இட்லி மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
பிறகு, அதில் 1 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்து 6 மணி நேரம் புளிக்க விடவும். நன்றாக புளித்த மாவில் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து வைக்கவும். இப்போது அடுப்பில் தோசைக் கல் வைத்து சூடானதும் தயார் செய்து வைத்துள்ள மாவில் தோசை ஊற்றி எடுக்கவும். அவ்வளவு தான் கர்நாடகா ஸ்டைல் பென்ன தோசை தயார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“