சுவை, சத்தான அவல் இட்லி ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
அவல்- 1 கப்
அரிசி மாவு- அரை கப்
தயிர்- 1 கப்
சோடா உப்பு- சிறிதளவு
உப்பு- தேவையான அளவு
தண்ணீர்- தேவையான அளவு
செய்முறை
முதலில் மிக்ஸி ஜார் எடுத்து அதில் அவலை போட்டு அரைக்கவும். இப்போது அரைத்த அவலை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் அரிசி மாவு, தயிர், உப்பு, தண்ணீர் சேர்த்து இட்லி மாவுப் பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். பின்னர் 1 மணி நேரம் ஊற விடவும். சோடா உப்பு சேர்த்து கலக்கவும்.
இப்போது அடுப்பில் இட்லி பாத்திரம் வைத்து இட்லி தட்டில் தயாரித்து வைத்த மாவு ஊற்றி வேக விடவும். எப்போது போல் வேக விடவும். வேண்டும் என்றால் இட்லி மாவில் கலந்து கூட இந்த இட்லி செய்யலாம். வேக வைத்து எடுத்தால் சுவையான, சத்தான அவல் இட்லி ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“