ஒரு முறை நாம் செப் தீனா செய்த அவல் கொழுக்கட்டை, நீங்களும் வீட்டில் செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்
அவல் 150 கிராம்
வேர்கடலை 100 கிராம்
தேங்காய் 4 துண்டு
அரிசி மாவு அரை கப்
பருப்பு பொடி
மிளகாய் பொடி அரை ஸ்பூன்
காயப் பொடி ¼ ஸ்பூன்
வெங்காயம் 2
இஞ்சி நறுக்கியது 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் நறுக்கியது 3 ஸ்பூன்
வத்தல் 4
சீரகம் ¼ ஸ்பூன்
கடுகு ¼ ஸ்பூன்
கருவேப்பிலை ஒரு கொத்து
கொத்தமல்லி இலை
உப்பு
நல்லெண்ணை
செய்முறை : அவலை நாம் தண்ணீர் சேர்த்து ஊற வைக்கவும். தொடர்ந்து இதை நாம் வடிகட்ட வேண்டும். மிக்ஸியில் வேர்கடலையை நாம் அரைத்துகொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்க்கவும் கடுகு, சீரகம் சேர்க்கவும். இஞ்சி, பச்சை மிளகாய் சேர்க்கவும், வெங்காயம் சேர்த்து கிளரவும். தொடர்ந்து கருவேப்பிலை சேர்த்து கிளரவும். அரைத்த வேர்கடலை சேர்த்து கிளரவும். தொடர்ந்து பெருங்காயம், கொஞ்சம் தேங்காய் தொடர்ந்து அவலை சேர்த்து கிளரவும். தொடர்ந்து கொத்தமல்லி இலை நறுக்கியதை சேர்த்து கிளரவும். தொடர்ந்து அடுப்பை அணைத்த பிறகு அரிசி மாவு சேர்த்து கிளரவும். தொடர்ந்து இதை ஆறவிடவும். கொழுக்கட்டை போல் பிடித்துகொள்ளவும். தொடர்ந்து எண்ணெய் சேர்த்து , கடுகு, கருவேப்பிலை, வத்தல் சேர்க்கவும், தொடர்ந்து பருப்பு பொடி, மிளகாய் பொடி, உப்பு சேர்த்து கிளரவும். தொடர்ந்து அவல் கொழுக்கட்டையை இதில் போட்டு டாஸ் செய்யவும். நன்றாக பொடி கலவையை மேலே படிகும்படி கிளரவும்.