சுவையான அவல் பால் கொழுக்கட்டை ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
அவல் மாவு - 4 கப்
நெய்-
உப்பு- சிறிதளவு
பால்- 2 கப்
பாதாம் பவுடர்- சிறிதளவு
வெல்லம்- சுவைக்கு தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் அவல் மாவு போட்டு (அவலை மிக்சியில் அரைத்து எடுத்தால் அவல் மாவு) 1 டீஸ்பூன் உப்பு, நெய் சேர்க்கவும். இப்போது அடுப்பில் பாத்திரம் வைத்து நீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
இப்போது அவல் மாவு கலவையுடன் சுடு தண்ணீரை சேர்த்து கிளறவும். நன்றாக கெட்டியாக பிசைந்து சிறு சிறு உருண்டைகள் செய்யவும். அடுத்து அடுப்பில் பால் வைத்து கொதி வந்த உடன், பாதாம் பவுடர்சேர்த்து கொதிக்க வைக்கவும். வெல்லத்தை தூள் செய்து போட்டு கிளறி, ஏலத்தூள் சேர்க்கவும். இப்போது உருண்டைகளை இதில் சேர்த்து மிதமான தீயில் கிளறி இறக்கவும்.
சூடு ஆறிய உடன் பாலுடன் உருண்டைகளை சாப்பிட்டால் அருமையாக இருக்கும். அவ்வளவு தான் அவல் பால் கொழுக்கட்டை ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“