அவல் வைத்து டேஸ்டியான பாயாசம் ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
அவல்- 1 கப்
பால்- 3 கப்
வெல்லம்- 1/2 கப்
நெய்- 1 ஸ்பூன்
முந்திரி- 10
உலர் திராட்சை- 2 ஸ்பூன்
கன்டென்ஸ்டு மில்க்- 1/4 கப்
ஏலக்காய் தூள்- கால் ஸ்பூன்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து, அதில் முந்திரி, உலர் திராட்சையை வறுத்து எடுத்து தனியே வைத்துக் கொள்ளவும். பின்னர் அதே நெய்யில் அவல் சேர்த்து மொறுமொறு வறுத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து மற்றொரு பாத்திரத்தில் பால் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும். அதில் வறுத்து வைத்துள்ள அவல் சேர்க்கவும். பின்னர் அதில் முந்திரியை ஊறவைத்து அரைத்துச் சேர்த்து கொதிக்கவிடவும். தொடர்ந்து, அதில் கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து கொதிக்கவிடுங்கள். இப்போது கீர் நன்கு கெட்டியாகி வரும். கடைசியாக வெல்லத்தை சேர்த்து காய்ச்சவும். கடைசியாக ஏலக்காய் தூள் சேர்த்து இறக்கினால் சூடான, சுவையான அவல் பால் கீர் ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“