Aval recipe in tamil, aval pasi paruppu pongal making: இயற்கையான சத்து மிகுந்த ஒரு உணவுப் பொருள் அவல். அதனை இன்னும் நாம் போதிய அளவில் பயன்படுத்தவில்லை என்றே கூறவேண்டும். எனினும் காலையில் அவசரமாக அலுவலகம் செல்கிறவர்களுக்கு, இது வரப் பிரசாதம். காரணம், சுலபமாகவும் துரிதமாகவும் டிபன் தயார் செய்யப் பயன்படும் ஒரு உணவுப் பொருள் அவல்.
தனியாக வசிக்கும் பேச்சிலர்கள், முதியோர்கள் ஆகியோர் சுலபமாக அவல் மூலமாக டிபன் அல்லது டின்னர் தயார் செய்து சாப்பிடலாம். சத்தான உணவுப் பொருளாகவும் இது அமையும்.
அவல் மூலமாக சூப்பரான பொங்கல் சமைக்கலாம் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? அவல் பொங்கல் தயார் செய்யும் முறையை இங்கே பார்க்கலாம்.
காலையில் எளிய முறையில் சத்தான சுவையான உணவு செய்ய நினைத்தால் அவல் பொங்கல் செய்யலாம். இன்று அதன் செய்முறை விளக்கத்தை பார்க்கலாம்.
Aval pasi paruppu pongal making: அவல் பொங்கல்
அவல் பொங்கல் செய்ய தேவையான பொருட்கள் :
அவல் - 1 1/2 டம்ளர், பாசிப்பருப்பு - 1/2 டம்ளர், உப்பு - தேவையான அளவு, பெருங்காயம் - சிறிதளவு, கொத்தமல்லி - தேவையான அளவு
தாளிக்க தேவையான பொருட்கள் : எண்ணெய் - 1 தேக்கரண்டி, நெய் - 2 தேக்கரண்டி, மிளகு - 1 தேக்கரண்டி, சீரகம் - 1 தேக்கரண்டி, பச்சைமிளகாய் - 2, இஞ்சி - 1 துண்டு, முந்திரிப்பருப்பு - 2 தேக்கரண்டி, கறிவேப்பிலை - 1 தேவைக்கு.
அவல் பொங்கல் செய்முறை :
* இஞ்சி, கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அவலை நன்றாக சுத்தம் செய்து தண்ணீரில் 5 நிமிடம் ஊற வையுங்கள். பின்னர் தண்ணீரை வடித்து விட்டு தனியாக வைக்கவும். பாசிப்பருப்பை உதிரும் அளவில் வேக வைக்கவும். அல்லது இரண்டு விசில்கள் வரும் வரை குக்கரில் வேக வைக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளிக்கவும். பின்னர் அவல் சேர்த்து வதக்கவும். அடுத்து அதில் வேக வைத்து வைத்துள்ள பாசிப்பருப்பினை சேர்த்து அதனுடன் உப்பு, காயம் சேர்த்து 3 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். அடுப்பை ‘ஸிம்’மில் வைத்து வேக விடவும்.
இப்போது பொங்கல் தயாராகும். பொங்கல் தயாரானதும் இன்னும் சிறிது நெய் சேர்த்துக் கலந்து கொத்தமல்லி தூவிப் பரிமாறவும். டேஸ்டி, ஹெல்தி அவல் பொங்கல் இதுதான்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"