கண் எரிச்சல்? இந்த 'பூ' சாறு எடுத்து இப்படி வையுங்க: டாக்டர் நித்யா
மடிக்கணினி, செல்போன் ஆகியவற்றை அதிகமாக பயன்படுத்துவதால் கண்களில் ஏற்படும் எரிச்சலை எப்படி சரி செய்வது என மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். அந்த டிப்ஸை இக்குறிப்பில் காணலாம்.
மடிக்கணினி, செல்போன் ஆகியவற்றை அதிகமாக பயன்படுத்துவதால் கண்களில் ஏற்படும் எரிச்சலை எப்படி சரி செய்வது என மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். அந்த டிப்ஸை இக்குறிப்பில் காணலாம்.
முன்பு ஐ.டி. துறையில் பணியாற்றுபவர்களே அதிகமாக மடிக்கணினி, செல்போன் போன்றவற்றை நாள் முழுவதும் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் இருந்தது. இதனால், கண் எரிச்சல், கண்ணில் வறட்சிதன்மை போன்ற பிரச்சனைகள் அவர்களுக்கு அதிகமாக இருந்தது.
Advertisment
ஆனால், தற்போது மாறி வரும் சூழலில் ஐடி துறை மட்டுமல்லாது பல்வேறு துறைகளிலும் கணினியின் தாக்கம் அதிகரித்துள்ளது. கணினி இல்லாமல் ஒரு வேலையும் செய்ய முடியாது என்ற சூழல் தற்போது உருவாகி இருக்கிறது. குழந்தைகள் கூட இப்போது ஆன்லைனில் டியூஷன் படிக்கின்றனர். அந்த அளவிற்கு கணினியின் வளர்ச்சி அதிகரித்து விட்டது.
அதே சூழலில் தொடர்ச்சியாக மடிக்கணினியோ அல்லது செல்போனையோ பார்க்கும் போது கண்கள் விரைவாக சோர்வடைந்து விடும். மேலும், கண்களில் எரிச்சலும் அதிகமாக இருக்கும். இதனை ஆவாரம்பூ சாறு கொண்டு எப்படி குணப்படுத்தலாம் என மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஆவாரம் பூவை நன்றாக அரைத்து அதன் சாறை மட்டும் தனியாக வடிகட்டி எடுக்க வேண்டும். இந்த சாறை ஒரு சிறிய துண்டு காட்டனில் எடுத்து, கண்களை மூடி இமை மீது வைத்து லேசாக ஒத்தடம் கொடுக்கலாம். இவ்வாறு செய்யும் போது கண்களில் ஏற்படும் வலி, எரிச்சல் போன்றவை குணமாகும் என மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். மேலும், தலையில் இருக்கும் உஷ்ணத்தையும் இது குறைக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Advertisment
Advertisements
நன்றி - Doctor Interview Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.