Advertisment

அட்டகாசமான அவியல்.. இது நெல்லை ஸ்பெஷல்!

நெல்லை அவியலும் செய்முறை ஒன்று போல தான் இருக்கும். ஆனால், டேஸ்டில் சற்று மாறுபடும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
aviyal recipe aviyal recipe tamil

aviyal recipe aviyal recipe tamil

Aviyal recipe, aviyal recipe tamil : கேரளா ஸ்டைல் அவியல் சாப்பிட்டு இருப்பீங்க. இன்று நெல்லையில் செய்யும் முறையில் அவியல். இது முக்கியமாக அடை தோசைக்கு அட்டகாசமாக இருக்கும். பொதுவாகவே கேரளா அவியல் தான் பலருக்கு தெரியும். தேங்காய் எண்ணெய் மிதக்கும் அந்த அவியலுக்கு சைவ பிரியர்கள் அடிமை.

Advertisment

நெல்லை அவியலும் செய்முறை ஒன்று போல தான் இருக்கும். ஆனால், டேஸ்டில் சற்று மாறுபடும். என்ன செய்யலாமா?

aviyal recipe aviyal recipe tamil : அவியல் செய்முறை:

கேரட், பீன்ஸ் அல்லது கொத்தவரை, முருங்கை, கத்திரி, மாங்காய்,சேனை, வெள்ளரி, வாழைக்காய், வெள்ளைப் பூசணி தேங்காய் ,மஞ்சள் தூள் ,பச்சை மிளகாய் ,சீரகம்.

அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

காய்கறிகளை ஒரே போல் மெல்லியதாக நீளவாக்கில் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

வாணலியில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி அதில் காய்கறிகளை போட்டு தேவைக்கு சிறிது உப்பு போட்டு வேக வைக்கவும். தண்ணீர் வற்றி காய் வெந்து வரும் போது அரைத்த தேங்காய் கலவையை சேர்க்கவும். அடுப்பை மீடியமாக வைத்து சிறிது கொதிக்க விட்டு பிரட்டி விடவும்.

கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்க்கவும். உப்பு சரிபார்த்து இறக்கவும்.

மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்து அவியலில் சேர்க்கவும்.

சுவையான நெல்லை அவியல் ரெடி.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Food
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment