சுவையான கல்யாண வீட்டு அவியல் செம்ம சுவையா இப்படி பண்ணுங்க.
தேவையான பொருட்கள்
2 வாழைக்காய்
4 கத்திரிக்காய்
சேனைக்கிழங்கு
அவரைக்காய்
1 கேரட்
முருங்கைக்காய்
உருளைக்கிழங்கு
மாங்காய்
தயிர் – ½ கப்
சின்ன வெங்யாம் – 5
தேங்காய் எண்ணெய் – 4 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 8
உப்பு
தேங்காய் 1 கப்
சீரகம 1 ஸ்பூன்
கடுகு – 1 ஸ்பூன்
செய்முறை: காய்கறிகளை நறுக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் எல்லா காய்கறிகளை சேர்க்கவும். தொடர்ந்து இதில் 1 கப் தண்ணீர் சேர்த்து மூடி வைக்க வேண்டும். ஒரு மிக்ஸியில் சின்ன வெங்காயம், சீரகம், பச்சை மிளகாய், தேங்காய் துருவல் சேர்த்து அரைத்துகொள்ளவும். தொடர்ந்து, இதை காய்கறிகளில் சேர்க்க வேண்டும். உப்பு சேர்த்து கிளரவும். தொடர்ந்து இதில் தயிர் சேர்க்கவும். தற்போது ஒரு சட்டியில் எண்ணெய் சேர்த்து அதில் தேங்காய் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு, கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொட்டவும்.