வறண்ட சருமம், முகச் சுருக்கத்துக்கு அவகாடோ ஃபேஸ் மாஸ்க்!

அவகாடோ பழத்தில் இருக்கும் எசன்ஷியல் ஆயில் சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவுகிறது.

Avocado Face Mask
Avocado Face Mask

Avocado Face Mask: வெயில் காலத்தைக் காட்டிலும் குளிர்காலம், சருமம், கூந்தலின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும். முகம், கை கால்கள், வறண்டு போக செய்யும். விலை கூடிய இரசாயன க்ரீம்களை பயன்படுத்தாமல், இயற்கையாக கிடைக்கும் பழங்களை வைத்து உங்கள் சருமத்தை பாதுகாக்க முடியும்.

குளிர் காலத்தில் சருமத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்க அவகாடோ பழம் சிறந்தது. அவகாடோ பழத்தில் இருக்கும் எசன்ஷியல் ஆயில் சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவுகிறது. கூந்தலில் ஏற்பட்டுள்ள வறட்சி மற்றும் பாதிப்புக்களை போக்க நன்கு பழுத்த அவகாடோவை அரைத்து முகம் மற்றும் கூந்தலுக்கு தடவலாம்.

இந்த பழத்தில் உள்ள ஆண்டிஆக்ஸிடண்ட், ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி மற்றும் ஆரோக்கிய கொழுப்புகள் இருப்பதால் நீங்கள் இளமையாக இருப்பீர்கள். மேலும் இதில் உள்ள வைட்டமின் ஈ சத்து சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கும்.

அவகாடோ ஃபேஸ் மாஸ்க்

அவகாடோ பழம், முகத்தில் சுருக்கம், முதிர்ச்சி ஆகியவற்றை தடுக்க பெரிதும் உதவுகிறது. நன்கு பழுத்த அவகாடோவை எடுத்து அரைத்து கொள்ளுங்கள்.

அரைத்து வைத்துள்ள பழத்துடன் ஒரு மேஜைக்கரண்டி தேன் மற்றும் பால் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இந்த கலவையை முகம், கழுத்து மற்றும் கைகளில் தடவி வரலாம். 15 முதல் 20 நிமிடங்கள் வரை வைத்திருந்து பின் கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Avocado face mask for dry skin

Next Story
அழகிய சுற்றுலாவுக்கு பெயர் போன கோயம்புத்தூர்!Best tourist places to visit in Coimbatore
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express