அவகேடோ பழத்தில் அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் மற்றும் வைட்டமின்கள் ஏ, டி, இ மற்றும் கே, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் கரோட்டினாய்டு புரதம் நிறைந்துள்ளது. இது எலும்பு மூட்டுகளைப் பலப்படுத்துகிறது.
இதில் இருக்கும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு, ஹார்மோன்களின் சமநிலையையும் பராமரிக்கிறது. அதில் உள்ள ஊட்டச்சத்துகள் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் உதவுகின்றன.
ஆனால் நம்மில் சிலர் அவற்றை சரியாக சேமிப்பதில் சிரமப்படுகிறோம். சரியாக சேமிக்காத போது விரைவில் அவை கெட்டுவிடும்.
Wellnesstactics இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவில், அவகோடா பழங்களை, குளிர்ந்த நீரில் போட்டு ஃபிரிட்ஜில் சேமித்து வைக்கவும். சில வாரங்களுக்குப் பிறகும் அவை புதிதாக இருக்கும், என்று கூறியது.
எனவே, நீண்ட ஆயுளை உறுதிசெய்ய அவகோடா பழங்களை சேமிப்பதற்கான சிறந்த வழி பற்றி நிபுணரிடம் கேட்க முடிவு செய்தோம்.
அவகோடா பழத்தை குளிர்ந்த நீரில் போட்டு ஃபிரிட்ஜில் சேமித்து வைத்தால் அது புத்துணர்ச்சியுடன் இருக்க உதவும். குளிர்ந்த நீர், பழுக்க வைக்கும் செயல்முறையை மெதுவாக்க உதவுகிறது, என்று டாக்டர் சந்தோஷ் பாண்டே ஒப்புக்கொண்டார்,
டாக்டர் சந்தோஷ் கூற்றுப்படி, அவகடோ பழங்களைச் சரியாகச் சேமிப்பதற்கான மற்ற வழிகள் பின்வருமாறு:
பழுக்காத அவகடோ பழங்களை அறை வெப்பநிலையில் வைக்கவும். வாழைப்பழம் அல்லது ஆப்பிளுடன் காகிதப் பையில் வைப்பதன் மூலம் நீங்கள் பழுக்க வைக்கலாம்.
பழுத்தவுடன், அவகடோ பழங்களை ஃபிரிட்ஜில் வைக்கவும், இது அவற்றின் ஆயுளை இன்னும் சில நாட்களுக்கு நீட்டிக்கும்.
பழுப்பு நிறமாவதைத் தடுக்க, உள்ளே சதையின் மீது எலுமிச்சை அல்லது எலுமிச்சை சாற்றைத் தூறலாம் என்று டாக்டர் பாண்டே கூறினார்.
அவகடோ பழுத்த நிலையில் மாறுபடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள், எனவே புத்துணர்ச்சியை அதிகரிக்க உங்கள் சேமிப்பு முறையை அதற்கேற்ப சரிசெய்யவும், என்று டாக்டர் பாண்டே கூறினார்.
பழுத்த அவகடோ பழத்தை எப்படி வெட்டுவது என்று சமையல் நிபுணர் குணால் கபூரின் சில டிப்ஸ் இதோ.
பழுத்த அவகடோ பழத்தை எடுத்து, வீடியோவில் காட்டியபடி விதையைச் சுற்றி நீளவாக்கில் வெட்டவும். இப்போது இரண்டு கைகளையும் பயன்படுத்தி, பழத்தை மெதுவாக முறுக்கி இரண்டு பகுதிகளாக பிரிக்கவும். விதையை உங்கள் விரல் நுனியில் மெதுவாக இழுத்து வெளியே எடுக்கவும்.
வெட்டிய அவகடோ பழத்தை மீண்டும் நீளவாக்கில் சிறிய துண்டுகளாக வெட்டி தோலை எளிதாக உரிக்கலாம் அல்லது வீடியோவில் காட்டியபடி ஸ்பூனைக் கொண்டு சதைப் பகுதியை மட்டும் தனியாக எடுக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“